ரேக்ளா வண்டிப் பந்தயம் (ரேக்ளா ரேஸ்) என்பது, திருவிழாக் காலங்களில் தமிழகத்தின் கிராமப்புரங்களில் நடைபெறும் காளை மாட்டுவண்டிப் பந்தயம் ஆகும். தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களிலும், கொங்கு நாட்டிலும் இந்த வகைப் பந்தயங்கள் நடைபெறுகின்றன.

               பந்தயம் நடைபெறும் குறிப்பிட்ட கிராமத்தையோ நகரையோச் சேர்ந்த பஞ்சாயத்து அமைப்புகள் இந்த ரேக்ளா வண்டிப் பந்தயத்தை நடத்துகின்றன. சில இடங்களில் தனியார் அமைப்புகளும் இந்தப் போட்டியை நடத்துவதுண்டு.

               பந்தயத்தில் ஈடுபடும் காளைகளின் உயரம், திறன், பலம் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு இவற்றை நான்கு பிரிவுகளாக வகைப்படுத்துகின்றனர்:

                                           1.பெரிய மாடு

                                           2.நடுத்தர மாடு

                                           3.கரிச்சான் மாடு

                                           4.பூஞ்சிட்டு மாடு

பந்தயத்தின் தொலைவு எவ்வளவு?

               பந்தய தொலைவு மாடுகளின் வகைகளை வைத்தே முடிவுசெய்யப்படுகின்றது. தமிழகத்தின் ஒரு சில இடங்களில் நடக்கும் பந்தயத்தில் பெரிய மாடு 15 கி.மீ தூரமும், நடுத்தரம் 12 கி.மீ தூரமும், கரிச்சான் 10 கி.மீ தூரமும், பூஞ்சிட்டு 07 கி.மீ தூரமும் ஓட வேண்டும் என்று தீர்மானித்துள்ளனர்.

               பார்வையாளர்கள் பந்தயம் தொடங்கும் இடத்திலும், வழிநெடுகிலும் நின்று போட்டியில் பங்கேற்போரை உற்சாகப்படுத்துவார்கள். பல ஆண்டுகளாக இப்போட்டி நடைபெற்று வருகிறது. போட்டியாளர்கள் உற்சாகத்தோடு இப்பந்தயத்துக்கு தயாராவார்கள்.

இந்த பந்தயம் எங்கு பிரபலம்?

              மதுரை அவனியாபுரம், புதுப்பட்டி, திண்டுக்கல் அய்யம்பாளையம், தூத்துக்குடி விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம், திருப்பூர் உடுமலைப்பேட்டை, கோவை பொள்ளாச்சியில் நடக்கும் ரேக்ளா ரேஸ் பந்தயங்கள் மிகவும் பிரபலமானவை.

             ஜல்லிக்கட்டுக்கு அலங்காநல்லூர் எப்படி பெயர்பெற்றதோ அதேபோல அலங்காநல்லூர் அருகே உள்ள புதுப்பட்டி கிராமம் ரேக்ளா ரேஸ் போட்டிக்கு பெயர்பெற்றது.

             ஒரு ரேக்ளா ரேஸ் வண்டிக்கான பந்தயக் காளைகள் பல லட்சம் ரூபாய் வரை விலை கொடுத்து வாங்கப்படுகிறது. முன்பெல்லாம் ஊருக்கு 40 பேர் ரேக்ளா ரேஸ் காளைகள் வைத்திருந்தனர். இப்போது விரல்விட்டு எண்ணும் அளவுக்குத்தான் காளைகளை வைத்துள்ளனர். இந்த காளைகளை மற்ற காலங்களில் உழவுக்கு பயன்படுத்துகின்றனர். இப்போது விவசாயம் குறைந்துவிட்டதால் ரேக்ளா ரேஸ் காளைகளை வளர்ப்பதும் குறைந்துவிட்டது.

காளைகளுக்கு ஊட்டச்சத்து அவசியமா?

                காளைகள் திடமாக இருக்க தினமும் பருத்திக்கொட்டை, கோதுமைத் தவிடு, பேரீச்சம்பழம், பீட்ரூட், முள்ளங்கி உள்ளிட்டவற்றை உணவாகக் கொடுப்பார்கள். இந்த ரேக்ளா ரேஸ் காளைகளை சந்தைக்கு சென்று வாங்க முடியாது. அதை வளர்ப்பவர்களிடம் நேரிடையாக கேட்டுத்தான் வாங்கமுடியும்.

பந்தயத்தில் கலந்து கொள்ள பயிற்சி தேவையா?

                 கிட்டத்தட்ட ஒரு வருஷம் பயிற்சி கொடுத்தால்தான், பந்தயத்தில் காளைகள் ஓடும். மாட்டைப் பார்த்தாலே ஓடும் என்ற நம்பிக்கை வந்தால்தான், விலை கொடுத்து வாங்கி பயிற்சி கொடுப்பார்கள். முதலில் உழவு ஓட்டி பழக்கிய பிறகு ரேக்ளா வண்டியில் பூட்டி கொஞ்ச தூரம் போய் பழகுவார்கள். தானாக ஓடத்தொடங்கியதும் பந்தயத்துக்கு அழைத்துச் செல்வார்கள்.

அதென்ன ரேக்ளா?

                  ரேக்ளாங்குறது ஒருத்தர் மட்டுமே போகக்கூடிய மாட்டு வண்டி. இந்த வண்டிங்க எல்லாமே பந்தயத்தை அடிப்படையாக வைத்து உருவாகின்றது. இதன் சக்கரங்களின் அளவு சிறியதாக இருக்கும். அப்போதுதான் பந்தைய தூரத்தை வேகமாக கடக்க முடியும்.

பொங்கல் பண்டிகையிலும் ரேக்ளா!

                 பொங்கல் பண்டிகை நாளில் மதுரை, சிவகங்கை, திருச்சி மாவட்ட மக்களுக்கு ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு வீர விளையாட்டு என்றால் கொங்கு மண்டல மண்ணின் மைந்தர்களுக்கு ரேக்ளா ரேஸ் என்றால் உயிர் ஏன் அதனினும் மேல்.

                ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் மதுரை மண்ணின் மைந்தர்களைப் போல, கொங்கு மண்டல மண்ணின் மைந்தர்களுகளும் ரேக்ளா பந்தயங்களுக்கு தயாராகி விடுவார்கள்.

                கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், கரூர், நாமக்கல் மாவட்ட கிராமங்களில் ரேக்ளா பந்தயங்கள் பராம்பரியமாக நடத்தப்படுகின்றன. சிறுவர்கள் முதல் வயதான முதியவர் வரை அனைவரும் அவரவர் வண்டியுடன் போட்டிக்காக காத்திருப்பார்கள்.

                பொங்கல் பண்டிகைக்கு சில வாரங்களுக்கு முன்பிருந்தே அவைகளை புது மாப்பிள்ளைகள் போல் கவனித்து கண்காணிப்பார்கள்.

                 ரேக்ளா எந்த மரத்தால் ஆனது?

                 மாட்டுவண்டி போல் அல்லாமல் ரேக்ளா வண்டிகளுக்கு நன்றாக விளைந்த தேக்கு மரத்தினை பயன்படுத்துகின்றனர். எடை குறைவாகவும் அதே நேரம் வலிமையுடையதாகவும் வண்டி இருந்தால்தான், பந்தய தூரத்தினை விரைவில் அடைய முடியும் என்பதால் கவனமாக தயார் செய்கின்றனர்.

எங்கு நடைபெறும்?

               முந்தைய காலங்களில் ரேக்ளா வண்டி பந்தயங்கள் அதற்குரிய மைதானங்களில் நடைபெறும். இப்போது தார்சாலைகளில்தான் பந்தயங்கள் நடத்தப்படுகின்றன.

               இந்த மண்ணின் மைந்தர்களுக்கு ரேக்ளா பந்தயம் வெறும் போட்டி மட்டுமல்ல அது அவர்களின் உயிர்களோடு கலந்தது என்றால் அது மிகையாகாது. அது அவர்களுக்கு மாடு அல்ல தெய்வம் என்றே சொல்லலாம். வருடம் முழுவதும் பொங்கல் பண்டிகை நோக்கி காத்திருந்து காளைகளை பந்தயத்துக்காகவே வளர்க்கின்றனர்.

ரேக்ளா வண்டிப் பந்தயம்!

கருத்துகள் இல்லை