பூர்வீகம்
இது ஹரியானா மாநிலத்தின் ரோத்தக் மாவட்டம், கர்னால் மாவட்டம், ஜிந்து, ஹிசார், குருகிராம் போன்ற மாவட்டங்களை பூர்வீகமாகக் கொண்டது.
நிறம் மற்றும் தோற்றம்
இந்த இனம் பொதுவாக சாம்பல் நிற திட்டுக்களுடன் வெண்மை நிறமுடையது. நீண்ட முகம், குறுகிய நெற்றி, கட்டான உடல் கொண்டது. இவற்றின் கொம்புகள் சிறியதாகவும், குறுகியதாகவும் அதன் முகம் குறுகி நீண்டதாகவும் இருக்கும்.
பயன்பாடு
இந்த இனத்தின் காளை மாடுகள் வேலை செய்யும் திறனுக்கு பெயர் பெற்றவை. வேகமான உழவிற்கும், சாலை போக்குவரத்திற்கும் காளை மாடுகள் ஏற்றதாகும். இம்மாடுகள் அதிக அளவில் வண்டி இழுக்க வட இந்தியாவில் பயன்படுத்தப்படுகிறது.
பால் உற்பத்தி
நாள் ஒன்றுக்கு ஒரு மாடு சராசரியாக 3-4 லிட்டர் கொடுக்கும். முதல் கன்று ஈனும் வயது சராசரியாக 40-60 மாதங்கள் ஆகும்.
கருத்துகள் இல்லை