2 மாதத்தில் - புன்சிரிப்பு, லேசான சிரிப்பு காணப்படும்.

             4 மாதத்தில் - கழுத்து நிற்பது, கை, கால்களை சிறிதளவு அசைக்கும்.

             8 மாதத்தில் - குழந்தை எவ்வித உதவியுமின்றி சுயமாக உட்காரத் தொடங்கும்.

             12 மாதத்தில் - தானாக எழுந்து நிற்கும்.

பிறந்த நாள் முதல் 6 வாரங்கள்

              தலையை ஒருபுறமாகத் திருப்பியவாறு மல்லார்ந்து படுத்துக்கொண்டு இருக்கும்.

               திடீரென்று ஏற்படும் சத்தம் கேட்டு குழந்தையின் உடல் விறுக்கென்று சிலிர்த்துக் கொள்ளுதல்.

              கைவிரல்களை இறுக்கமாக மூடி வைத்து இருக்கும்.

               குழந்தையின் உள்ளங்கையில் ஒரு பொருளையோ அல்லது விரலையோ வைத்தால் இறுக்கமாகப் பிடித்துக்கொள்ளுதல்.

6 முதல் 12 வாரங்கள்

              குழந்தை கழுத்தை நன்றாக நிற்க வைக்கப் பழகும்.

              பொருள்களின் மீது கண்களை நிறுத்தி உற்றுப்பார்க்கும்.

              குழந்தை திடீரென அழுகும்.

3 மாதத்தில் குழந்தையின் செயல்பாடு

              மல்லார்ந்து படுத்தவாறு தன்னுடைய இரண்டு கைகள் மற்றும் கால்களை சீராக அசைக்கும். அழுகை சத்தத்துடன் சிணுங்குதல், சந்தோஷத்தை வெளிப்படுத்தும் வகையில் ஒருவித சத்தங்கள் போன்றவற்றையும் வெளிப்படுத்தும்.

              குழந்தை தன்னுடைய அம்மாவை அடையாளம் கண்டு கொள்ளும். மேலும் அம்மாவின் குரலுக்கு ஏற்ப தனது உணர்வுகளை வெளிப்படுத்தும்.

              குழந்தை தனது கை விரல்களை முன்பு போல் மூடி வைக்காமல் திறந்து வைத்துக்கொள்ளும்.

              அம்மாவை தவிர மற்றவர்களை அடையாளம் கண்டு கொள்ள தெரியாது.

6 மாதத்தில் குழந்தையின் செயல்பாடு

               குழந்தை தன்னுடைய இரண்டு கைகளையும் தட்டியவாறு விளையாட தொடங்கும்.

               தன்னைச் சுற்றியுள்ள பகுதியில் மிக அருகில் இருந்து ஏதேனும் சத்தம் கேட்டால் குழந்தை உடனே திரும்பி பார்க்கும்.

              குழந்தை படுத்தவாக்கிலேயே உருண்டு போகும்.

              எவ்வித பிடிப்போ உதவியோ இல்லாமல் உட்கார தொடங்கும்.

             குழந்தை நிற்கும் பொழுது தன்னுடைய உடல் எடையைத் தாங்கும் சக்தியை தனது கால்களில் பெறும்.

9 மாதங்கள்

              கைகளை ஊன்றியோ, எவ்வித பிடிப்போ /உதவியோ இல்லாமலும் உட்காரும்

              குழந்தை தவழ்ந்து செல்ல தொடங்கும்.

              அருகிலுள்ள பொருள்களை தள்ளி விட ஆரம்பிக்கும்.

12 மாதங்கள்

             குழந்தை எழுந்து நிற்கும்

             தாத்தா, பாட்டி, மாமா போன்ற வார்த்தைகளை கொஞ்சும் மொழியில் சொல்லத் தொடங்கும்.

             வீட்டில் உள்ள பொருட்களையும், சுவரையும் பிடித்துக்கொண்டு நடக்கும்.

             பிறரின் கையை பிடித்துக் கொண்டு தடுமாறி நடக்க முயற்சி செய்யும்.

18 மாதங்கள்

               குழந்தை யாருடைய உதவியும் இல்லாமல் டம்ளரை, பிடித்து பாலை குடிக்கத் தொடங்கும். பால் புட்டிகள் எதுவும் இனிமேல் தேவைப்படாது.

               கீழே விழாமலும் தடுமாறாமலும் வீட்டில் நடை பழகும்.

               ஓரிரு வார்த்தைகளை பேசத்தொடங்கும்.

               குழந்தை தானாகவே சாப்பிட ஆரம்பிக்கும்.

                உடல் நலக்குறைவான குழந்தைகள் நடக்க சிறிது கஷ்டப்படுவர்.

2 வருடங்கள்

               கால் சட்டை போன்ற உடைகளை அதுவே போட்டுக்கொள்ளும்.

               கீழே விழாமல் ஓடிச் செல்லும்.

               புத்தகத்தில் உள்ள படங்களைப் பார்க்க ஆர்வப்படும்.

                தனக்கு என்ன வேண்டும் என்பதை வாய் திறந்து கேட்க ஆரம்பிக்கும்.

                பிறர் சொல்லுவதைத் திருப்பிச் சொல்லிப் பழகும்.

                 உடலில் உள்ள சில உறுப்புகளைக் காட்டி அதன் பெயரைக் கேட்டால் பெயர் சொல்லும்.

3 வருடங்கள்

               தலைக்குமேல் கையைக் கொண்டு சென்று பந்தை வீசி எறியும்.

               சில எளிய வகையான கேள்விகளுக்கு பதில் சொல்லும்.

               பொருட்களை இங்கேயும் அங்கேயும் வைப்பது போன்ற சின்ன சின்ன வேலைகளில் உதவி செய்யும்.

               குறைந்த பட்சம் ஒரு நிறத்தின் பெயரையாவது சொல்லும்.

               மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாட தொடங்கும்.

4 வருடங்கள்

               மூன்று சக்கர சைக்கிளை மிதித்து ஓட்ட ஆரம்பிக்கும்.

                புத்தகங்கள் அல்லது பத்திரிக்கைகளில் உள்ள படங்களின் பெயரைச் சொல்லும்.

                உறவினர்களிடம் கொஞ்சு மொழியில் பேசப் பழகும்

5 வருடங்கள்

               நிறங்களின் பெயரைச் சொல்ல தொடங்கும்.

               படிக்கட்டுகளில் பெரியவர்களைப் போலவே கால்களை மாற்றி வைத்து ஏறிச் செல்லும்.

               குதித்தும், தாண்டியும் செல்லத் தொடங்கும்.

               வார்த்தை உச்சக்கட்டங்களை நன்றாக உச்சரிக்கும்.

குழந்தைகளின் வளர்ச்சிபடி நிலைகள்

கருத்துகள் இல்லை