இரகம்

             கோ.எப்.எஸ். - 29 ,கோ.எப்.எஸ். - 31

மண்

               பசுந்தீவனச் சோளத்தை ஆண்டு முழுவதும் எல்லா மண் வகைகளிலும் பயிரிடலாம்.

நிலத்தை தயார் செய்தல்

                நிலத்தை 2 முறை நன்கு உழவு செய்ய வேண்டும். பிறகு 1 ஏக்கருக்கு 10 டன் என்ற அளவில் மக்கிய தொழு உரம், 10 பாக்கெட் அசோஸ்பைரில்லம், 10 பாக்கெட் பாஸ்போ பாக்டீரியா கலந்து இட வேண்டும். இதனால் மண்ணிற்கு அதிக சத்துகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கிடைக்கும்.

விதை

                ஒரு ஹெக்டருக்கு 12.5 - 20 கிலோ விதை தேவைப்படும். விதையை பிஜாமிர்தம் கொண்டு விதை நேர்த்தி செய்தபின் விதைக்க வேண்டும். விதைகளை வரிசைக்கு வரிசை 30-40 செ.மீ. இடைவெளியும், செடிக்குச் செடி 10 செ.மீ. இடைவெளிவிட்டு பார்களில் ஊன்ற வேண்டும்.

நீர் மேலாண்மை

                விதைத்தவுடன் நீர்ப் பாசனம் செய்ய வேண்டும். 3-வது நாளில் உயிர் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அதன் பின்பு 7 நாள்களுக்கு ஒரு முறை நீர்ப் பாசனம் செய்ய வேண்டும்.

பயிர் பாதுகாப்பு

                வாரம் இருமுறை பஞ்சகாவ்யா தெளிப்பதால் பூச்சியை கட்டுப்படுத்தலாம்.

அறுவடை

                விதைத்த 60-70 நாள்களிலிருந்து தொடர்ந்து அறுவடை செய்யலாம். பயிர்கள் பூத்தப் பின் அறுவடை செய்து கால்நடைகளுக்கு கொடுக்க வேண்டும். ஒவ்வொரு மறுதாம்பு பயிறும் 50 நாள்கள் இடைவெளிகளில் அறுவடை செய்தால் ஆண்டுக்கு 6 -7 முறை அறுவடை செய்யலாம். ஒரு ஹெக்டர் நிலத்தில் ஆறு முதல் ஏழு மறுதாம்பு பயிர்களில் இருந்து 160 டன் பசுந்தீவனம் கிடைக்கும்.

தீவனச் சோளம்

கருத்துகள் இல்லை