பிள்ளைகளின் கல்வியில் பெரும் பங்கு பெற்றோர்களுக்கே உள்ளது என்பதை புரிந்துக்கொள்வோம். பள்ளி, படிப்பு, மதிப்பெண், தேர்வு. இவைதான் பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் தினமும் தவறாமல் பயன்படுத்தும் வார்த்தைகளாக உள்ளன.

              இதனால் படிப்பு, மதிப்பெண் போன்ற வார்த்தைகளை பெரும்பாலான மாணவர்கள் கசப்பாகவே நினைக்கின்றனர். இதுவே பெற்றோர் - பிள்ளை உறவினில் சுமூகமான சூழலை சீர்குலைக்கிறது.

              ஒவ்வொரு மாணவ/மாணவிக்கும் திறன் அளவு மாறுபடும். அவர்களின் திறனையும் தாண்டி அதிக மதிப்பெண்கள் எடுக்கச் சொன்னால், அவர்களால் என்ன செய்ய முடியும்? மனஉலைச்சலுக்கு ஆளாகி, சில சமயங்களில் தவறான முடிவுகளைக்கூட எடுக்கத் தோன்றும். அதற்குப் பெற்றோர்களும், பள்ளிகளும்தான் பொறுப்பேற்றுகொள்ள வேண்டும்.

              தங்கள் பிள்ளை குறைவான மதிப்பெண் எடுத்தாலோ அல்லது தேர்வில் தோல்வியடைந்தாலோ அவர்கள் அந்தச் சூழலை எதிர்கொள்ள பெற்றோர்தான் தன்னம்பிக்கை தரவேண்டும்.

              பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும் பிள்ளைகளிடம் தினமும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி அன்றைய நிகழ்வுகள் குறித்து பெற்றோர்கள் பேச வேண்டும். தங்களுக்குத் தெரிந்ததை பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுப்பதோடு, அவர்கள் வாயிலாக பெற்றோர்களும் பல விஷயங்களைத் தெரிந்துகொள்ளலாம். பிள்ளைகளிடம் நண்பர்களாக மனம்விட்டுப் பேசி, பழக வேண்டும்.

               அரசுப் பணிக்கான போட்டித் தேர்வுகளை எழுத, பட்டம் பெற்றிருந்தால் போதும். எனவே, குழந்தைகளின் பள்ளி நாட்களில் மதிப்பெண் பந்தயத்தில் மட்டுமே குறியாக அவர்களை ஓடவைக்காமல், போட்டித் தேர்வுக்கான பயிற்சிகளுக்கு அவர்களை தயார்படுத்தலாம்.

               பள்ளி பருவம் முடிந்த பின் கல்லூரிக்கு செல்லும் மனபக்குவத்தை பெற்றோர்கள் ஏற்படுத்த வேண்டும்.

பள்ளிப்பருவம்

கருத்துகள் இல்லை