கறவை மாடுகளுக்கு பலவிதமான சிக்கல்கள் ஏற்படும். அதை தவிர்க்க முறையான தீர்வுகளை கையாள வேண்டும். அதில் நஞ்சுகொடி தாக்குதலும், கருப்பை வெளித்தள்ளுதலும் முக்கியமானவை ஆகும்.

நஞ்சுக்கொடி

              கருப்பையினுள் வளரும் சிசுவுக்கு உணவு பரிமாற்றம், கழிவுகள் வெளியேற்றம் என அனைத்தும் நஞ்சுக்கொடி வழியாகவே வெளியேறும்.

             அந்த நஞ்சுக்கொடியானது மாடுகள் கன்று ஈன்ற பிறகு 3-8 மணி நேரத்திற்குள் வெளித்தள்ளப்பட்டு கீழே விழுந்துவிடும். அதற்கு மேலும் நேரம் எடுத்துக் கொண்டால் அதை கவனித்து தீர்வு அளிக்க வேண்டும்.

தீர்வு

               இதற்கு தீர்வாக கன்று ஈன்ற பிறகு தீவனமாக மூங்கில் இலை அல்லது வெண்டக்காயை அளிக்கலாம். ஏனெனில் இவற்றில் கருப்பையை சுருங்கி விரிவடைய செய்யக்கூடிய வேதிப்பொருள் உள்ளதால் நஞ்சுக்கொடி தானாகவே வெளியேறும்.

கருப்பை வெளித்தள்ளுதல்

               கருப்பை வெளித்தள்ளுதல் என்பது கருப்பை வாய் தள்ளுதல், உறுப்பு தள்ளுதல், அடி தள்ளுதல் என பலவகையாக மாடுகள் பாதிக்கப்படுவதாகும். இதற்கு காரணம் ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோன் சில பசுக்களில் அதிக அளவில் சுரப்பதால் ஏற்படலாம். வெளித்தள்ளப்பட்ட கருப்பையை உடல்மட்டத்திற்கு சிறிது மேலே தூக்கி பிடித்தால் சிறுநீர் வெளியேறி, கருப்பை வீக்கமடைவதை தவிர்க்கலாம்.

தீர்வு

               இந்த பாதிப்பு பொதுவாக தாது உப்புகள் மற்றும் சத்துக்கள் குறைப்பாட்டாலும் ஏற்படுகிறது. எனவே சினைக்காலத்தில் பசும்புல் அளிப்பது அவசியமாகும். அதாவது ஒரே வேளையில் அதிக பசுந்தீவனத்தை அளிக்காமல் பிரித்துக்கொடுக்கலாம்.

வயிறு உப்புசம்

                மாட்டின் வயிற்றில் அதிகப்படியான நொதித்தலால் வாயுக்கள் வெளியேற்றப்படுவதால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது.

தீர்வு

                இதற்கு தீர்வாக மாடுகளுக்கு அதிகமாக பயறுவகை தீவனங்களை அளிக்காமல் இருக்க வேண்டும். இளம் பசுந்தீவனங்களை தவிர்த்து, முதிர்ந்த தீவனங்களை மாடுகளுக்கு அளிக்கலாம்.

                தீவனம் அளிக்கும் போது ஒரு குறிப்பிட்ட அளவு அடர்தீவனங்களை உலர் தீவனங்களுடன் கலந்து அளிக்கலாம்.

               தானிய தீவனங்களை ஓரளவிற்கு அரைத்து கொடுக்க வேண்டும். அதாவது மாவு போன்ற அரைத்த தீவனங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

மடி நோய்

                நுண்ணுயிரி, நச்சுயிரி போன்றவை பால் உற்பத்தி செய்யும் சுரப்பிகளைத் தாக்குவதால் மடி நோய் ஏற்படுகிறது. அதாவது நோய்த்தாக்கப்பட்ட மடியானது வீக்கம் அடைந்து பெரிதாக காணப்படும். மேலும் மடியை மாடுகள் தொடவிடாது. பால் ஒருவிதமாக (திரிந்து, மஞ்சள் நிறமாக) காணப்படும்.

தீர்வு

                பால் கறப்பதற்கு முன், கறப்பவர்கள் தங்களது கைகளை சோப்பு அல்லது கிருமி நாசினி போட்டு கழுவிய பின்னரே கறக்க வேண்டும்.

                பால் கறந்தவுடன் மாடு தரையில் படுக்கும்போது அசுத்தமான தரை மூலம் மடிக்காம்பு துவாரம் வழியாக நுண்ணுயிரிகள் மடிக்குள் சென்று, பல்கிப் பெருகி மடி நோயை உண்டாக்கும். மாட்டின் கொட்டகையை எப்போதும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.

               மாட்டின் கொட்டகை மற்றும் பால் கறக்கும் முன்னர் மடி போன்றவற்றை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

               பால் கறக்கும் நேரத்தை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். மாற்று நேரத்தில் கறவை செய்வதை தவிர்க்க வேண்டும்.

               பால் மடியில் தேங்கி இருக்காத வண்ணம் கறக்க வேண்டும்.

              உடனுக்குடன் மடிநோய் தாக்கும் மாடுகளை மற்ற மாடுகள் இருக்கும் இடத்தை விட்டு தனியாக பராமரிக்க வேண்டும்.

              தவறான முறையில் பால் கறந்தாலும், அதாவது கட்டை விரலை மடக்கி பால் கறந்தாலும் மடி நோய் தாக்கும்.

              மேலும் கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளை பயன்படுத்தியும் இந்த நோயை குணப்படுத்தலாம்.

கறவை மாடுகளுக்கு ஏற்படும் சிக்கல்களும், தீர்வுகளும்!

கருத்துகள் இல்லை