இது ஒரு வைரஸ் நோய் ஆகும். இந்த நோய் உள்ள விலங்கின் உமிழ் நீரில் இருந்து வைரஸ் வெளியேறுகிறது. இந்நோய் உள்ள விலங்கு கடித்தாலோ அல்லது உடம்பில் ஏதேனும் புண் இருந்து அதை நக்கினாலோ இந்த வைரஸ் பரவும். வைரஸ் பரவிய சதைப்பகுதியிலேயே இனப்பெருக்கம் செய்து நரம்பு வழியாக தண்டுவடம் மற்றும் மூளையை அடைகிறது. இந்நோய் தாக்கிய 3 முதல் 4 நாட்களுக்குள் மரணம் அடையும்.
இதற்கான அறிகுறி, ஆரம்பத்தில் மாடு தீனி சாப்பிடாது, வாயில் எச்சில் வடியும், வெறித்து பார்க்கும், வாலைத்தூக்கி சினை பருவத்தில் இருப்பது போல் நடந்து கொள்ளும், சக பசுக்கள் மீது தாவும், மூர்க்கமாகும், முட்டும் ஆனால் கடிக்காது, பசுவின் தோலில் அரிப்பு ஏற்படும், கொம்புகளால் தரையை குத்தி உடைத்துக் கொள்ளும், கத்தும், மலச்சிக்கலும், வயிறு உப்புசமும் ஏற்படும்.
இந்த நோய் உள்ள மாட்டை கையுரை அணியாமல் தொடக்கூடாது. கடிபட்ட இடத்தை சுத்தமான நீர் மற்றும் சோப்பு கொண்டு கழுவி விட வேண்டும். அதன் பிறகு மருத்துவரை உடனே அழைக்கவும். வெறி கடிக்கான தடுப்பூசி அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் போடப்படும்.
கருத்துகள் இல்லை