வறண்ட நிலத்திலும் தண்ணீர் பாய்ச்சினால் நன்கு வளரக் கூடியது. உவர் நிலங்களிலும் பயிர் செய்யலாம். அதிகம் தூர் கட்டும் தன்மை கொண்டது.
மண்
வடிகால் வசதி கொண்ட மண்ணில் நன்றாக வளரும்.
நிலம் தயார் செய்தல்
நிலத்தை நன்கு உழ வேண்டும். கடைசி உழவிற்கு முன் 1 ஏக்கருக்கு அடியுரமாக 5 டன் மக்கிய தொழு உரம் இட்டு நன்கு உழ வேண்டும்.
விதை
ஒரு ஏக்கருக்கு 3 கிலோ விதையை மணலுடன் கலந்து தூவி விதைக்க வேண்டும்.
நீர் மேலாண்மை
வறண்ட நிலங்களிலும் வளரக்கூடியதால், வாரம் ஒருமுறை நீர் பாசனம் செய்தால் போதும்.
பயிர் பாதுகாப்பு
பூச்சிகளின் தாக்குதல் இருந்தால் மட்டும் பஞ்சகாவ்யா கரைசல் தெளிக்கலாம்.
உரம்
அமிர்த கரைசலை நீர் பாசனம் செய்யும் போது கலந்துவிடுவதால் நன்கு வளரும். மேலும் நல்ல தரமான பசுந்தீவனம் கிடைக்கும்.
அறுவடை
விதைத்து 70-75 நாட்களுக்கு பின் அறுவடை செய்யலாம். பின் அடுத்தடுத்து 45-50 நாட்களுக்கு ஒரு முறை 5-6 முறை அறுவடை செய்யலாம். 5-6 மறுதாம்பு பயிர்களில் 35-40 டன் பசுந்தீவனம் பெறலாம்.
கருத்துகள் இல்லை