தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையின் இரண்டாம் நாள் மாட்டுப்பொங்கல் விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்படும். இது பட்டிப் பொங்கல் அல்லது கன்றுப் பொங்கல் எனவும் அழைக்கப்படுகிறது. மக்களின் வாழ்வில் ஒன்றிய பசுவுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும், பசுக்களில் எல்லாத் தேவர்களும் இருப்பதாலும் பசுக்களை வணங்கி வழிபடும் நாளாகக் கொண்டாடுகின்றனர்.
உழவர்களின் உற்ற நண்பர்கள் கால்நடைகள்தான். உழுவதிலிருந்து உழுத நிலத்திற்கு தனது சாணத்தை இயற்கை உரமாகத் தந்தும், அடுப்பெரிக்கவும், ஏரிழுக்கவும், நீரிறைக்கவும், போரடிக்கவும் இதுபோன்று பல வேலைகளில் மனிதனுக்கு உதவி செய்து எண்ணற்ற விதங்களில் பயன்படும் மாடுகளை கௌரவிக்கும் வகையில் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
மாட்டுப்பொங்கல் வரலாறு
நாம் இப்பொழுது மாட்டு பொங்கல் கொண்டாட ஒரு புராணக்கதை உள்ளது.
ஒரு நாள் சிவபெருமான் நந்தியிடம் பூமிக்கு செல்லுமாறு சிவபெருமான் கேட்டுள்ளார். தினமும் எண்ணெய் தேய்த்து குளித்து, மாதம் ஒரு முறை மட்டும் உண்ணுமாறு அங்கே இருக்கும் மக்களிடம் தான் கூறச் சொன்னதாக நந்தியைக் கூறச் சொன்னார்.
ஆனால் நந்தியோ மாதம் ஒரு முறை எண்ணெய் தேய்த்து குளித்து, தினமும் உண்ணுமாறு தவறாக கூறி விட்டது. இதனால் கோபம் கொண்ட சிவபெருமான் நந்தியைச் சபித்தார். இனி பூமியில் நெற்பயிர்களுக்கு பஞ்சம் ஏற்படும் என கூறினார். இனி நந்தி என்றுமே பூமியில் வாழ்ந்து, மக்களுக்கு அவர்களின் நிலத்தை உழுது கொடுக்க வேண்டும் என அவர் சாபமளித்தார். இவ்வாறு கால்நடை இந்த நாளில் தொடர்புபடுத்தப்படுகிறது. அதனால் தான் நாம் மாட்டுப் பொங்கல் கொண்டாடுகிறோம்.
உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் ஆவினத்திற்கு நன்றி கூறும் நாளே இந்நாளாகும்.
கருத்துகள் இல்லை