காளை மாடுகள் வேளாண் தொழிலில் வண்டி இழுக்கவும், உழவிற்கும், இனவிருத்திக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. இதனால் காளைகளை சரியாகப் பராமரித்துத் தகுந்த ஊட்டமளிக்க வேண்டும். காளைகள் உயர்ந்த திமிலும், வாயில் முதல் முன்னங்கால் வரை தசைகள் தொங்கி கொண்டு இருப்பது காளைகளின் சிறப்பாகும்.

              இனப்பெருக்கத்திற்காக பயன்படும் காளைகளின் பருவ நிலை

              மாடுகளில் காளைகள் 16 முதல் 18 மாத வயதில் பருவம் அடையும், எருமை காளைகள் 4 முதல் 6 மாதங்களுக்கு பிறகு பருவமெய்துகின்றன. 30 மாத காளைகள் அதிகமாக இனப்பெருக்கத்திற்கு பயன்படுகிறது.

காளை பராமரிப்பு

             காளை கன்றுகளை ஒரு வருடம் முடிந்ததும் தனியாக கொட்டில் அமைத்து வளர்ப்பது நன்று.

             கொட்டகையின் தரையானது மேடு பள்ளமாக கால் குளம்புகளை பாதிக்கும் வகையில் இருக்க கூடாது. அதிகம் வளர்ந்த குளம்புகளை நீக்கிச் சீர் செய்ய வேண்டும். நன்கு பராமரிக்கப்படாத குளம்புகள் வலியை ஏற்படுத்தும்.

             நோய் தொற்றுகளில் இருந்து காளைகளை பாராமரிக்க வேண்டும். காளைக்கொட்டகைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

             காளைகளுக்கு சுத்தமான தண்ணீர் கொடுக்கவேண்டும்.

             சரியான நேரத்தில் குடற்புழு நீக்கம் செய்யவேண்டும் மற்றும் தடுப்பூசிகளை போட வேண்டும்.

             காளைகளுக்கு புரத சத்து மிகுந்த உணவளிக்க வேண்டும். ஏனெனில் நன்றாக வேலை செய்யவும், சிறந்த விந்து உற்பத்திக்கும் சத்துள்ள தீவனம் அளிக்க வேண்டும்.

             காளைகள் திடகாத்திரமாகவும், பெரிய தலையுடன், அகன்று இருக்க வேண்டும்.

              காளை மாடுகளுக்கு 2கிலோ அடர் தீவனம் கொடுக்க வேண்டும். சரியான இடைவெளியில் தேவையான அளவு மட்டும் தீவனம் அளிக்க வேண்டும். அளவுக்கு அதிகமாகவும், குறைவாகவும் தீவனம் கொடுக்கக்கூடாது.

காளை | காளை பராமரிப்பு

கருத்துகள் இல்லை