உழவுத் தொழிலில் உற்ற நண்பனாக விளங்குபவை மாடுகள் தான். இவைகள் நமக்கு வருமானம் தருபவை. இவைகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் விபத்துகளால் அவற்றின் உயிருக்கோ அல்லது உடல் நலத்திற்கோ தீங்கு ஏற்படுகின்றன. அப்படி விபத்து ஏற்படும் போது மருத்துவரை அழைக்கும் முன் நம்மிடம் உள்ள மருந்துகளைக் கொண்டு பாதிப்பினை அதிகரிக்காமல் முதலுதவி செய்ய வேண்டும்.

               எனவே முதலுதவி பெட்டி ஒவ்வொரு கால்நடை பராமரிப்பாளர் வீட்டிலும் கட்டாயம் இருக்க வேண்டும். அதில் இருக்க வேண்டிய மருந்துகள் கட்டுத் துணி, கயிறு, பஞ்சு, ஒட்டுப் பட்டை (பிளாஸ்திரி), டெட்டால் அல்லது சாவ்லான், கத்தரி கோல், டிங்க்சர் அயோடின், பீட்டாடுன் கலவை, டிங்க்சர் பென்சாயின், கையுறை, வெள்ளை துணி, பாராசிட்டாமால், அவில், பெரிநார்ம், ஊசிகள், திசு காகிதம், வெப்ப மானி, டார்ச் லைட், பேனா, வெள்ளை தாள், சங்கிலி போன்றவை ஆகும்.

               முதலுதவி மட்டும் செய்து முழுசிகிச்சை செய்யாவிட்டால் கால்நடைகள் இறக்க வாய்ப்பு உண்டு. எனவே அருகாமையில் உள்ள கால்நடை மருத்துவரை அழைத்து உரிய சிகிச்சை அளிப்பது அவசியமாகும்.

முதலுதவி பெட்டி

கருத்துகள் இல்லை