இவ்வின எருமைகளின் தாயகம் உத்திரப்பிரதேசத்தின் ஆக்ரா மற்றும் எட்டாவா மாவட்டமும், மத்திய பிரதேசத்தின் குவாலியர் மாவட்டமுமாகும்.
நிறம் மற்றும் தோற்றம்
இவற்றின் உடல் மற்றும் கண் இமைகள் பொதுவாக செம்பு நிறத்தில் காணப்படும். இவற்றின் கழுத்தின் அடிப்பகுதியில் இரண்டு வெள்ளை நிறக்கோடுகள் காணப்படும்.
பயன்பாடு
இந்த எருமையினக் காளைகள் வேலைத்திறனுக்கும் அதிக வெப்பத்தினைத் தாங்குவதற்கும் பெயர் பெற்றவை.
பால் உற்பத்தி
இவற்றின் சராசரி பால் உற்பத்தி ஒரு நாளைக்கு 5-7 லிட்டர் ஆகும். இந்த எருமையினங்களின் பாலில் கொழுப்புச்சத்து 6-12.5 சதவிகிதம் காணப்படும்.
கருத்துகள் இல்லை