மாடுகளில் மலட்டுத்தன்மைக்கு காரணம் ஊட்டச்சத்து பற்றாக்குறை, பிறவிக்கோளாறு, தொற்று நோய், கருமுட்டை வெளிவருவதில் குறைபாடு, பராமரிப்பு குறைபாடு மற்றும் ஹார்மோன் சரியான அளவில் சுரக்காத காரணத்தால் ஏற்படுகிறது.

மலட்டுத்தன்மை குறைபாடுகளைக் குறைக்க வழிமுறைகள்

               15 முதல் 20 கிலோ பசுந்தீவனமும், 4 முதல் 6 கிலோ உலர் தீவனமும், 3 கிலோ அடர்தீவனம் கொடுக்க வேண்டும். இதன் மூலம் ஊட்டச்சத்து குறைபாட்டால் வரும் மலட்டுத்தன்மையைக் குறைக்கலாம்.

               கன்று குட்டிகளுக்கு சீம்பால் சரியான அளவில் ஊட்டம் செய்யவேண்டும். ஆறு மாதத்திற்கு பிறகு 6 கிலோ தீவனம் மற்றும் கலப்பு தீவனம் கொடுக்க வேண்டும். 6 மாதத்திற்கு ஒரு முறை குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். இதுபோன்ற பராமரிப்புகளை செய்யதால் மலட்டுத்தன்மை வருவதைக் குறைக்கலாம்.

               கருப்பையில் நோய்தொற்று ஏற்படுவது மலட்டுத்தன்மைக்கு முக்கியமான காரணம் ஆகும். சினைப்பருவத்தில் வெளிப்படும் திரவம் கண்ணாடி போன்று வழவழப்பாக இல்லாமல் மங்கலாகவோ அல்லது மஞ்சள் நிறத்தில் காணப்படுவது நோய் தொற்றின் அறிகுறியாகும். இந்த மாடுகளுக்கு சினை ஊசி போடாமல் கருப்பையினுள் மருந்து செலுத்தி குணப்படுத்திய பின் அடுத்த சினைப் பருவத்தில் சினை ஊசி போட வேண்டும். இதன் மூலம் மலட்டுத் தன்மை வராமல் பாதுகாக்கலாம்.

               சரியான தருணத்தில் கருவூட்டல் செய்தால் இனப் பெருக்க உறுப்புகளில் நோய்க் கிருமிகள் புக வாய்ப்புகள் குறைவு. மேலும் இச்சமயங்களில் நோய் எதிர்ப்புத் திறன் அதிகமாக உள்ளதால் நோய் ஏற்பட வாய்ப்புகள் இல்லை.

              சினை பருவத்திற்கு வராத மாடுகளை கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று கால்நடை மருத்துவரிடம் சிகிச்சை செய்ய வேண்டும்.

மலட்டுத்தன்மை | மலட்டுத்தன்மைக்கு காரணம் | மலட்டுத்தன்மை குறைபாடுகளைக் குறைக்க வழிமுறைகள்

கருத்துகள் இல்லை