இந்நோயானது மாடுகளைத் தாக்கும் கொடிய வகை நோயாகும். இந்நோய் பிக்கோர்னா விரிடே எனும் குடும்பத்தைச் சார்ந்த ஆப்தோ வைரஸ் எனும் நச்சுயிரியால் எற்படுகிறது. இந்நோயினால் பாதிக்கப்பட்ட மாடுகளின் பால் அல்லது உமிழ் நீர் போன்றவற்றில் நீண்ட நேரம் இந்த நச்சுயிரி உயிரோடு இருக்கும். பாலை 72 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 15 நொடிகள் பாஸ்சுரைசேசன் செய்யும்போது இந்த வைரஸ் அழிந்து விடுகிறது. இந்த வைரஸ் ஆல்கஹால், குளோரோபார்ம், ஈதர் போன்ற வேதிப்பொருட்களால் பாதிக்கப்படுவதில்லை.

அறிகுறிகள்

                மாடுகளுக்கு அதிக காய்ச்சல் மற்றும் பசியின்மை உண்டாகும். நோயினால் பாதிக்கப்பட்ட மாடுகளின் வாயிலிருந்து உமிழ் நீர் நூல் போல தொங்கிக்கொண்டு இருக்கும்.

                மேலும் நோய் காரணமாக மாடுகள் காலை உதறிக் கொண்டு இருக்கும். பிறகு நொண்டி நடக்கும். அதேபோல் பாதிக்கப்பட்ட மாடுகளின் வாயில் மற்றும் மடியில் கொப்புளங்கள், புண்கள் காணப்படும்.

தடுப்பு முறைகள்

                 பண்ணையில் இருக்கும் கன்றுகளுக்கு 8 வார வயது முதல் கோமாரி நோய்த் தடுப்பூசியும், 12 வார வயதில் இரண்டாவது தடுப்பூசியும், 16 வார வயதில் மூன்றாவது தடுப்பூசியும் பின்பு 4 மாதத்திற்கு ஒரு முறை கோமாரி நோய்த்தடுப்பூசியையும் தவறாமல் போட வேண்டும். ஏப்ரல் - மே மாதம் தடுப்பூசி தொடர்ந்து அளிக்க வேண்டும்.

                 கோமாரி நோய்க்காக தடுப்பூசி கொடுக்கப்பட்ட மாடுகளை மட்டுமே புதிதாக வாங்க வேண்டும். மேலும் தடுப்பூசி அளித்த 15-21 நாட்களுக்கு பிறகே தடுப்பூசி அளித்த மாடுகளை வாங்கலாம்.

                புதிதாக வாங்கி வந்த மாடுகளை சில நாட்கள் தனியாக கட்டி வைத்து பராமரிக்க வேண்டும். மேலும் பண்ணைக்குள் வரும் வாகனங்கள் மற்றும் பண்ணையில் நுழைபவர்களின் கால்கள் கிருமி நாசினி நனைத்து உள்ளே வருமாறு கிருமி நாசினி கரைசல் நிரம்பிய ஒரு பள்ளம் போன்ற பகுதி ஏற்படுத்த வேண்டும்.

               கோமாரி நோய் தாக்குதல் இல்லாத இடங்களிலிருந்து அல்லது 6 மாதம் முன்பு நோய் தாக்கிய பகுதிகளிலிருந்து மட்டுமே தீவனங்களை வாங்கவேண்டும்.

               பாதிக்கப்பட்ட மாடுகளில் கன்றுகளை பாலூட்ட அனுமதிக்கக்கூடாது. மேலும் பாதிக்கப்பட்ட மாடுகளின் பாலை கன்றுகளுக்கு கொடுக்கக்கூடாது.

சிகிச்சை முறை

               நோய் பாதிக்கப்பட்ட மாடுகளை மற்ற மாடுகளிடமிருந்து தனியாக கட்டி பராமரிக்க வேண்டும்.

               காலில் புண் இருந்தால், குப்பைமேனி, காட்டுத் துளசி அல்லது திருநீற்றுப் பச்சை செடிகளில் ஏதேனும் ஒரு செடியின் 100 கிராம் இலையுடன், பூண்டு 10 பல்கள், 100 கிராம் மஞ்சள் தூள் ஆகியவற்றை நன்றாக இடித்து 250 மில்லி நல்லெண்ணெய் அல்லது வேப்பெண்ணெயில் காய்ச்சி நோயால் பாதிக்கப்பட்ட கால்நடையின் கால் குளம்புகளில் தடவ வேண்டும்.

               மருந்தை தடவுவதற்கு முன்பு, கால்நடையின் கால் குளம்புகளை உப்பு, மஞ்சள் தூள் கலந்த நீரில் நன்றாகக் கழுவி ஈரத்தை துடைக்க வேண்டும்.

               கால் புண்ணில் புழுக்கள் இருந்தால் முதல் நாளில் கற்பூரம் சேர்த்து புண்ணில் தடவ வேண்டும்.

               இவ்வாறு செய்வதன் மூலம் புழுக்கள் உருவாகுவது கட்டுப்படுத்தப்படும்.

               இந்த மூலிகை மருந்தைப் பயன்படுத்துவதன் மூலம் கோமாரி நோய் கட்டுப்படுத்தப்பட்டு நல்ல பயனைத் தரும்.

கோமாரி நோய் | அறிகுறிகள் | தடுப்பு முறைகள் | சிகிச்சை முறை

கருத்துகள் இல்லை