இந்த பித்தப்பை நோயானது அனப்பிளாஸ் மார்ஜிநேல், அனாபிபிளாஸ்மா சென்டிரேல் என்னும் ஓரணு உயிரியால் மாடு மற்றும் எருமை மாடுகளில் நோய் ஏற்படுகிறது. இந்த நோயானது இரத்தம் உறிஞ்சும் உண்ணிகள் மற்றும் பேன்கள் மூலமாக பரவுகிறது.
அறிகுறிகள்
பொதுவாக மாடுகளுக்கு போடப்படும் ஊசிகள், கொம்பு நீக்கும் கருவிகள், மாடுகளுக்கு ஆண்மை நீக்கம் செய்யும் கருவிகள், மாடுகளை அடையாளக் குறியிடும் கருவிகள் முறையாக சுத்தம் செய்யாமல் பயன்படுத்துவதன் மூலமாகவும் நோய் பரவுகிறது.
அதுமட்டுமல்லாமல் இந்த நோய் மாடுகளை தாக்குவதால் இரத்தசோகை, எடை குறைதல், மூச்சுத் திணறல் போன்றவை ஏற்படுகிறது. நோய் பாதிக்கப்பட்ட கால்நடையில் காய்ச்சல் அதிகமாகி பின்பு குறைவாகும்.
இதனால் மாடுகளுக்கு பசியின்மை, மூக்கு காய்தல் மற்றும் மருத்துவம் செய்யாமல் அதிக நாட்களானால் மஞ்சள் காமாலை ஏற்படும். வயது முதிர்ந்த மாடுகளில் இந்த நோயின் பாதிப்பு அதிகமாக காணப்படும்.
மாட்டு பண்ணையில் ஏதேனும் மாடு இந்நோயினால் பாதிக்கப்பட்டால் உடனே தடுப்பு நடவடிக்கையாக உண்ணிகள், பேன்கள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும். இந்நோய் தாக்கிய மாடுகளுக்கு ஆரம்ப காலத்திலேயே சிகிச்சை அளிக்க வேண்டும்.
தடுப்பு முறைகள்
இதைக் கட்டுப்படுத்த, மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகளை, மாடுகளின் எடைக்கேற்ப, குறிப்பிட்ட அளவு உட்கொள்ள செய்தல் வேண்டும். மாடுகளின் புறத்தோலில் ஒட்டிக் கொள்ளும், உண்ணிகளை கிருமிநாசினியால், அழிக்க வேண்டும். மருத்துவ ஆலோசனை பெறுவது கட்டாயம்.
கருத்துகள் இல்லை