விவசாயத்தில் இயந்திரங்கள் வருவதற்கு முன் உழவு செய்வதற்கும், நிலம் சமப்படுத்துவதற்கும், கிணற்றில் தண்ணீர் இறைத்து பாசனம் செய்வதற்கும், மண் மற்றும் தொழு உரம் கொட்டுவதற்கும் ஏர் மாடுகள் பயன்படுத்தப்பட்டன. அப்பொழுது ஒரு விவசாயி வீட்டில் இரண்டு ஜோடி ஏர் மாடுகள் இருக்கும். குறைந்தது ஒரு ஜோடி ஏர் மாடாவது இருக்கும். விவசாயத்தின் பல தரப்பட்ட தொழிலுக்கு அவை பயனுள்ளதாக இருந்தன. ஆனால் தற்போது ஏர் உழவு செய்யவதற்கு, போதிய ஏர் மாடுகள் இல்லை.
ஏர் மாடுகளுக்கு இணை எது?
நவீன காலத்திலும், ஏர் மாடுகளுக்கு இணையாக எதுவும் கிடையாது. டிராக்டர் போன்ற இயந்திரங்களால், நிலத்தின் மூலை முடுக்குகளுக்கு சென்று உழவு செய்ய முடியாது. ஏர் மாடுகளால் சிறிய இடங்களிலும், ஓரமாக உள்ள பகுதிகளிலும் எளிதாகவும், ஆழமாகவும் உழவு செய்ய முடிகிறது. ஏர் மாடுகள் இருப்பதால், அதன் சாணம் உரமாகப் பயன்படுகிறது.
உழவு இயந்திரங்கள்
வேளாண்மையில், உழவு இயந்திரங்கள் அதிகரிப்பால், ஏர் மாடுகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. ஏர் மாடுகள் பூட்டி, உழவு செய்யும் தொழிலாளர்களின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது.
விவசாயத்தில் உழுவதில் தொடங்கி அறுவடை வரை முற்றிலுமாக தற்போது இயந்திரமயமாகியுள்ளது. மேலும், நாட்டில் உணவுப் பற்றாக்குறை வந்துவிடக்கூடாது என்பதற்காக அரசும் பல்வேறு சலுகைகளையும் அறிவித்துவருகிறது.
செலவு
காளை மாடுகளை நம்பிய காலத்தில் விவசாயிகளிடம் உழைப்பு இருந்ததால் அவர்களிடம் நோய் இல்லை. நஞ்சு இல்லாத சாப்பாடு கிடைத்தது. அதோடு விதை மற்றும் உரம் விலை கொடுத்து வாங்க வேண்டியதில்லை.
தற்போதெல்லாம் எல்லாவற்றையுமே விலை கொடுத்து செய்ய வேண்டியிருக்கிறது. உழவு மாடுகளின் காலம் எதுவோ அதுவே பொற்காலம் ஆகும்.
கருத்துகள் இல்லை