பர்கூர்
பர்கூர் மாட்டை மலை மாடு அல்லது செம்மறை மாடு என அழைப்பார்கள்.
பூர்வீகம்
ஈரோடு மாவட்டத்தின் பர்கூர் மலையினைச் சுற்றியுள்ள பகுதிகளில் இம்மாட்டினங்கள் காணப்படுகிறது.
நிறம் மற்றும் தோற்றம்
பர்கூர் மாட்டினங்களின் தோல் பழுப்பு நிறத்தில் வெள்ளை நிறத்திட்டுகளுடன் காணப்படும். உடற்கட்டுடன், நடுத்தர அளவிலான உடலமைப்பை பெற்றிருக்கும்.
பயன்பாடு
இவை மற்ற நாட்டு மாடுகளைவிட இரு மடங்கு அதிகம் உழைக்கும். சில சமயங்களில் வெள்ளை மற்றும் அடர்த்தியான பழுப்பு நிறங்களிலும் இம்மாட்டினங்கள் காணப்படும்.
வறட்சியைத் தாங்கி வளரும். கரடு முரடான மண்ணிலும் உழவடிக்கும். இவற்றின் கால் குளம்புகள் லாடம் அடிக்க தேவையில்லாதவாறு கெட்டியாகவும் உறுதியாகவும் இருக்கும்.
கருத்துகள் இல்லை