அனபிளாஸ்மோஸிஸ் என்ற நோய் ரிக்கெட்சியா என்ற நுண்ணுயிரினால் ஏற்படுகிறது. இந்நோய் பெரும்பாலும் கலப்பின மாடுகளை தாக்குகிறது. சினை மாடுகளுக்கு நஞ்சுக்கொடி மூலமாக இந்த நோய் ஏற்பட அதிகமான வாய்ப்புள்ளது. கொம்பு நீக்கம், காதுகளில் அடையாள துளையிடுதல் மூலமாக இந்நோய் பரவுகிறது.

அறிகுறிகள்

               இந்த அனபிளாஸ்மோஸிஸ் நோய் பாதிக்கப்பட்ட மாடுகள் அதிக காய்ச்சலுடனும், உடல்நிலை பாதிக்கப்பட்டும் காணப்படும்.

               மேலும் சளி, கண்ணீர் வடிதல், தீவனம் எடுத்துக்கொள்ளாமல் காணப்படும்.

               அதிகமான இருமல், ஒரு விதமான சத்தம் மூச்சுவிடும்போது ஏற்படும்.

               மாடுகளின் தோல் வறண்டும், தசைகள் நடுக்கமடைந்தும் இந்த நோயினால் காணப்படும்.

               கண்கள், வாய்கள் மற்றும் பிறப்புறுப்பின் சவ்வுகள் என அனைத்தும் வெளிரிய நிறமாக காணப்படும்.

தடுப்பு முறைகள்

               இந்த நோய்க்கு கால்நடை மருத்துவரை அணுகி சிகிச்சை அளிக்க வேண்டும்.

               நோய்களால் தாக்கப்பட்ட மாடுகளை மற்ற கால்நடைகளிடமிருந்து தனிமைப்படுத்தி பராமரிக்கவேண்டும்.

               தடுப்பூசிகள் மாடுகளுக்கு போடுவதன் மூலமாகவும் இந்த நோயினைக் கட்டுப்படுத்தலாம்.

               ஒட்டுண்ணிகள் மற்றும் பூச்சிகளின் மூலம் நோய் பரவுவதால் இவற்றை கட்டுப்படுத்துவதன் மூலம் இந்நோய் வருவதைக் குறைக்கலாம்.

அனபிளாஸ்மோஸிஸ் | அறிகுறிகள் | தடுப்பு முறைகள்

கருத்துகள் இல்லை