தற்போதுள்ள சூழ்நிலையில் கால்நடைகளுக்கான தீவன பற்றாக்குறை மாட்டுப்பண்ணை தொழிலில் இருப்பவர்களுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. மேலும், மாறிவரும் தொழில்நுட்பங்களுக்கேற்ப வேளாண் தொழிலை எளிமைப்படுத்த பலவித கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளன. அவற்றுள் தீவனங்களை நறுக்குவதற்கும் மற்றும் வெட்டுவதற்கும் சில விவசாய இயந்திரங்களும் பயன்பாட்டில் உள்ளது.

தீவன புல் அறுவடை இயந்திரம்

               தீவன பயிர்களை அறுவடை செய்ய பிரஷ் கட்டர் எனப்படும் கருவி உள்ளது. சக்கரம் பொருத்தப்பட்ட இந்த இயந்திரத்தை கையில் வைத்துக்கொண்டு வயலில் நீட்டினால் தீவனப்பயிர்களை அறுவடை செய்து விடும்.

               சோளத்தட்டு, சீமைபுல், மற்றும் கால்நடைகளுக்கு தேவையான அனைத்து வகையான புல் வகைகளையும் அறுவடை செய்யலாம்.

                இந்த கருவியானது தீவனங்களை விரைவாக அறுவடை செய்யவும், நேரம் மற்றும் ஆட்கள் தேவையை குறைத்து மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

                இந்த கருவியை பயன்படுத்தி 6 மணி நேரத்தில் 1 ஏக்கர் தீவன பியரை அறுவடை செய்ய முடியும்.

                அறுவடை செய்யும் பயிர் வகைகளுக்கு ஏற்றவாறு சுலபமாக மாற்றி இணைக்க கூடிய உபகரணகள் இந்த கருவியில் கொடுக்கப்பட்டுள்ளது.

                இந்த கருவியின் எடையானது மிகவும் குறைவானது ஆகும். இக்கருவி 7 கிலோ எடை மட்டுமே கொண்டுள்ளது.

                தீவன அறுவடை இயந்திரமானது பெட்ரோலில் இயங்கக்கூடிய 2 ஸ்ட்ரோக் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளதால் மிக விரைவாக பயிர்களை அறுவடை செய்ய முடியும்.

                இந்த கருவியின் அடிப்பாகத்தில் தீவனங்களை எளிதில் வெட்டும் வண்ணத்தில் கத்திகளும் பொருத்தப்பட்டுள்ளது.

                மேலும் இக்கருவியில் வெட்டிய தீவனங்களைத் தாங்கி நிலை நிறுத்துவதற்கு ஒரு உயரமான நிலத் தகடும் அவற்றை ஒரு புறமாகத் தள்ளி விடுவதற்கு நிலத் தகட்டின் நடுப் பாகத்தில் வார்ப்பட்டைகள் இணைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை