இரகம்
கோ1 மற்றும் கோ2
மண்
களிமண் தவிர அனைத்து மண்ணிலும் வளரும். வடிகால் வசதியுள்ள அனைத்து நிலங்களிலும் கினியாப்புல் வளரும்.
நிலம் தயார் செய்தல்
நிலத்தை 2 முறை நன்கு உழவு செய்ய வேண்டும். 1 ஏக்கருக்கு அடியுரமாக 5 டன் மக்கிய தொழு உரம் இட வேண்டும்.
விதை
ஒரு ஹெக்டேர் நிலத்தில் விதை 2.5 கிலோ, அல்லது ஒரு ஹெக்டேர் நிலத்தில் நட 20000 கரணைகள் தேவைப்படும். இடைவெளி 50 x 30 செ.மீ. என்ற அளவில் இருக்க வேண்டும்.
நீர் மேலாண்மை
5 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும்.
பயிர் பாதுகாப்பு
தசகாவ்யாவை மாதம் இரு முறை தெளிக்க வேண்டும். இதனால் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.
அறுவடை
விதை முளைத்து 70-80 நாட்களுக்கு பின் முதல் அறுவடை செய்யலாம். கரணைகள் நட்டு 45 நாட்கள் கழித்தும் அறுவடை செய்யலாம். அடுத்தடுத்த அறுவடைகள் 45 நாட்கள் இடைவெளியில் செய்யலாம். ஐந்து அறுவடைகளில் 150 டன் பசுந்தீவனம் பெறலாம்.
கருத்துகள் இல்லை