கர்ப்பப்பை வெளித்தள்ளுதலுக்கு முக்கிய காரணம் ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோன் அதிகப் படியாக சுரப்பதேயாகும். மாடுகள் அதிகப்படியாக முக்குவதால் கர்ப்பப்பை வெளித்தள்ளப்படுகிறது. குளிர்காலத்தில் மாடுகளை ஓரே இடத்தில் கட்டி வைப்பதால் இந்நிலை ஏற்படுகிறது.

அறிகுறிகள்

               மாடுகளின் பிறப்பு உறுப்பின் உட்சவ்வு துருத்திக்கொண்டு இருக்கும்.

               கருப்பை வெளித்தள்ளி சில மணி நேரங்களில் வீங்கி பெரியதாக காணப்படும்.

               கறவை மாடுகள் வேகமாக மூச்சு விடும் போது வலியால் ஏற்படும் சத்தம், அதிக சோர்வாக காணப்படுதல், எழ முடியாமை போன்றவை கர்ப்பப்பை வெளித்தள்ளுவதன் முக்கியமான அறிகுறிகளாகும்.

               வெளித்தள்ளப்பட்ட கருப்பையில் சாணம், இரத்தம், தூசுகள் காணப்படும்.

               தீவிரமான நிலையில் கருப்பையின் இரத்தக்குழாய்கள் வெடித்து இரத்தம் வெளியேறும். இதனால் மாடுகள் இறக்கும் நிலைக்குத் தள்ளப்படும்.

தடுப்பு முறைகள்

              இந்நோயினால் பாதிக்கப்பட்ட மாடுகளை தனியாக வைத்து பராமரிக்க வேண்டும். கைகளைக் கொண்டு அமுக்கவோ அல்லது தொடவோ கூடாது.

              வெளியே தள்ளப்பட்ட கர்ப்பப்பையை சுத்தமான ஈரத்துணியைக் கொண்டு மூடி வைக்க வேண்டும்.

              சிகிச்சை அளிப்பதற்கு தகுதி வாய்ந்த கால்நடை மருத்துவரை அணுக வேண்டும்.

கர்ப்பப்பை முழுவதும் வெளித்தள்ளுதல் | அறிகுறிகள் | தடுப்பு முறைகள்

கருத்துகள் இல்லை