குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும் வளர்ச்சிக்கும் சத்தான உணவுகள் மிகவும் அவசியமாக விளங்குகிறது. சில எளிதான உணவுகளில் கூட அதிக சத்துக்களைக் கொண்டிருக்கும்.
சிறு குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு 1000-1400 கலோரிகள் வரை தேவைப்படும். இதுவே உங்கள் குழந்தை மிகவும் சுறுசுறுப்பாக இருந்தால் கலோரிகளின் தேவையும் அதிகரிக்கக்கூடும். இதனால், கலோரிகளை மனதில் போட்டுக்கொண்டு குழப்பிக்க வேண்டாம். பொதுவாக, குழந்தைகளின் உணவுப் பழக்கம் ஒரே மாதிரி இருக்காது. ஒரு நாள் நல்ல பசியுடன் நன்றாகச் சாப்பிடுவார்கள். மறுநாள் சாப்பாடு வேண்டாம் என அழுகவும் செய்வார்கள்.
ஆதலால், உணவைக் கொடுக்கும்போது கலோரிகளைக் கணக்கிட அவசியமில்லை. அவர்களுக்குப் போதிய ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுக் கொடுக்கிறீர்களா என்பதே முக்கியம். குழந்தையின் வயதுக்குத் தேவையான ஊட்டச்சத்துள்ள உணவுகளை ஏதாவது ஒரு வகையில் கொடுக்க வேண்டும். அதுவே முக்கியம். அதை மனதில் வைத்துக்கொண்டாலே போதும்.
குறைந்தது 2-3 மணி நேரத்துக்கு ஒரு முறை சிறு குழந்தைகளுக்கு உணவைச் சாப்பிட கொடுப்பதோ திரவ உணவுகளை அருந்த கொடுப்பதோ… ஏதோ ஒன்று அவர்களுக்கு வயிற்றுக்குள் நல்ல ஆகாரமாகச் சேர வேண்டும் என்பது கட்டாயம்.
முதலில் 6 மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டும் தரவும். 6 மாதங்களுக்கு பிறகு அரிசிக்கஞ்சி (அ) பருப்புக்கஞ்சி, காய்கறி, கீரை, வறுத்து அரைத்த கோதுமை, ராகி பவுடரில் (2-3 ஸ்பூன்) உப்பு சேர்த்து கஞ்சி, மசித்த வாழைப்பழம் இவைகளை 1-2 வாரங்கள் தந்து ருசி பழக்கவும்.
வீட்டில் உணவினைத் தயாரிக்கும் போது காரம் போடாமல் செய்யவும். அதனை சிறிது சிறிதாகப் பிரித்து வைத்து, 6 வேளைகளில் தரவும். குழந்தையின் இரைப்பையின் கொள்ளளவு குறைவாக இருக்கும்.
பச்சரிசி, வெல்லம், ஏலக்காய் கலந்து அதிரசம் செய்து கொடுக்கலாம். இது இரும்புச்சத்து நிறைந்தது. உடைத்த வேர்க்கடலை, வெல்லப்பாகு ஆகியவை கலந்து கடலை மிட்டாய் செய்து கொடுக்கலாம். புரதம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்தது. கடைகளில் கிடைக்கும் தரமான கடலை மிட்டாய்களையும் வாங்கிக் கொள்ளலாம்.
கொண்டைக்கடலை, பச்சைப்பயிறு, வேர்க்கடலை, கொள்ளு இவற்றில் ஏதாவது ஒன்றை எடுத்து வேகவைத்து அதனுடன் தேங்காய் மற்றும் மாங்காய் கலந்து தாளித்து சுண்டலாக செய்து கொடுக்கலாம்.
இருப்பினும் வளரும் குழந்தைகளுக்கு முக்கியமான ஐந்து உணவுப் பொருட்களில் உடலினை சிறப்பாக பாதுகாக்க உதவும் சத்துக்கள் ஏராளமாக உள்ளது.
வாழைப்பழம் - இதில் நார் சத்தும் உடலுக்குத் தேவையான பொட்டாசிய சத்தும் அதிகப்படியாக காணப்படுகிறது. வாழைப்பழம் எலும்பு, சிறுநீரகம், இதயம் போன்றவற்றை பாதுகாக்க உதவுகிறது.
பால் - குழந்தைகளுக்கு தேவையான சுண்ணாம்பு சத்து, புரதச் சத்து மற்றும் வைட்டமின் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளது. குழந்தைகள் அன்றாடம் இரண்டு அல்லது மூன்று டம்ளர் பால் கண்டிப்பாக அருந்த வேண்டும். அப்பொழுது தான் வளரும் குழந்தைகளின் எலும்புகளுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கும்.
முட்டை - இதில் அதிகப்படியான புரதச் சத்து, தாதுச்சத்து மற்றும் வைட்டமின் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளது. முட்டை என்பது அதிக சத்துக்கள் அடங்கிய ஒரு மாத்திரை என்று கூறினால் அது மிகையாகாது. ஒரு முட்டையை சாப்பிடுவதால் குழந்தைகளுக்கு எளிதாக பல சத்துக்கள் கிடைத்து விடுகின்றன.
உலர் திராட்சை - இதனை சாப்பிடுவதால் குழந்தைகளுக்கு இரும்புச் சத்து மற்றும் நார் சத்து எளிதாக கிடைக்கிறது. சாப்பிடுவதற்கு இனிப்பாகவும் சத்தானதாகவும் உள்ளதால் குழந்தைகளும் அதிகம் விரும்புவார்கள். உலர் திராட்சையை சுடுநீரில் நன்கு கழுவிய பிறகே குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.
பருப்பு வகைகள் - அதிகமான புரதச்சத்து மற்றும் தாதுச்சத்து நிரம்பியுள்ளது. இதய நோய்களிலிருந்து பாதுகாக்கவும் உடலில் உள்ள தேவையான கொழுப்பை தக்க வைக்கவும் புரதச் சத்து உதவுகிறது. குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான ஆகாரமாகவும் பருப்பு வகைகள் உள்ளன. முந்திரி, வேர்க்கடலை, பாதாம் போன்றவைகள் அதிக சத்துக்கள் நிறைந்த பருப்புகளாகும்.
குழந்தைகளுக்கு கடைகளில் விற்கும் திண்பண்டங்களை வாங்கிக் கொடுத்து உடல் நலத்தை வீணாக்குவதை விட சத்தான உணவு பொருட்களை வீட்டில் வாங்கி வைத்து அவ்வப்போது கொடுப்பதால் உடலுக்கு எந்தவித தீங்கும் விளைவிக்காது.
கருத்துகள் இல்லை