தேவையான பொருட்கள்:

              * முருங்கைக் கீரை1 கட்டு

              * கடுகுஅரை டீஸ்பூன்

              * சீரகம்அரை டீஸ்பூன்

              * உளுந்து1 டீஸ்பூன்

              * கடலை பருப்பு1 டீஸ்பூன்

              * சின்ன வெங்காயம்10

              * பூண்டுப் பல்3-4

              * உப்பு, எண்ணெய்தேவைக்கேற்ப

              * தேங்காய் துருவல்1 கப்

              * வறுத்து தோல் நீக்கிய வேர்கடலை3 டீஸ்பூன்

              * மிளகாய் வற்றல்5

செய்முறை :

               கீரையை நன்றாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பூண்டு, சின்ன வெங்காயம் பொடியாக நறுக்கி வைக்க வேண்டும்.

                கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு போட்டு தாளிக்க வேண்டும். பின் உளுந்து, கடலை பருப்பு, மிளகாய் வற்றல் சேர்த்து சிவக்க விட வேண்டும்.

               இதில் நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து லேசாக வதக்கி ஒரு கப் தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும். கொதி வந்ததும் கீரையை சேர்த்து மூடி வேக விட வேண்டும்.

               கீரை வெந்ததும் விரும்பினால் வறுத்து தோல் நீக்கிய வேர்கடலை கொரகொரப்பாக பொடித்து 2 அல்லது 3 டீஸ்பூன் சேர்த்து எடுக்க வேண்டும்.

               தேங்காய் பிடிக்கும் என்றால் வேர்கடலையுடன் தேங்காய் துருவல் அல்லது வெறும் தேங்காய் துருவல் 1 கப் சேர்த்து இறக்கலாம்.

               சூடான சுவையான முருங்கைக் கீரை பொரியல் ரெடி

                இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : சாதம்

முருங்கைக் கீரை பொரியல் செய்முறை

கருத்துகள் இல்லை