கர்ப்ப காலத்தில் சில உணவுகளைக் கட்டாயம் பெண்கள் தவிர்க்க வேண்டும். கர்ப்பிணிகள் அதிகம் டீ, காபி அருந்தக்கூடாது. கர்ப்ப காலத்தில் இரத்த அழுத்தம் மாறக்கூடும். அதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால் மருத்துவர் ஆலோசனைப்படி தேவைப்பட்டால் உப்பின் அளவை மாற்றலாம். ரத்த கொதிப்பு இருக்கிறது என உப்பை ஒரேயடியாக குறைத்து விடவோ தவிர்க்கவோ கூடாது. அது மிகவும் ஆபத்தானது. கர்ப்ப காலத்தில் பெண்கள் புகையிலை போடக்கூடாது.

                 மது அருந்துதல், புகை பிடித்தல் போன்ற பழக்கம் உள்ள பெண்கள் அதை உடனடியாக நிறுத்துவது நலம். ஏனென்றால் அவை பெண்களை மட்டுமல்ல குழந்தையின் உடல்நலனையும் கடுமையாக பாதிக்கும். வீட்டில் உள்ள வேறு யாருக்காவது புகை பிடிக்கும் பழக்கம் இருந்தால் கூட கர்ப்பிணிகளுக்கு அது ஆபத்தாகும். எனவே வீட்டில் யாரையும் புகை பிடிக்க அனுமதிக்க வேண்டாம்.

                 தெருவோர கடைகளில் விற்கும் பண்டங்கள், பாக்கெட் உணவுகள், ஜூஸ் ஆகியவற்றை சாப்பிடக்கூடாது. சுகாதாரமான சூழ்நிலையில் தயாரிக்கப்பட்ட உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும். குறிப்பாக அசைவ உணவுகளை வீட்டில் தயாரித்து சாப்பிடுவது நல்லது. மேலும்,

              * மெர்குரி அதிகம் அடங்கிய மீன்

              * சரியாக வேக வைக்கப்படாத முட்டை

              * வேகவைக்காத இறைச்சி

              * காய்ச்சாத பால்

              * சுத்தமற்ற பழம் மற்றும் காய்கறிகள்

              * காஃபின்

              * மூலிகை தேநீர் (மருத்துவரின் பரிந்துரையற்றது)

              * பதப்படுத்தப்பட்ட உணவுகள்

              * மிருதுவான பாலாடைக்கட்டி

              * அலெர்ஜி தரும் உணவுகள்

                     போன்றவைகளை கர்ப்ப காலத்தில் தவிர்த்துக்கொள்வது மிகவும் நல்லது.

கர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்

கருத்துகள் இல்லை