டிரிக்கோமோனாஸ் ஃபீட்டஸ் என்னும் புரோட்டோசோவாவினால் இந்நோய் பரவுகிறது. இந்நோயினால் கருச்சிதைவு மற்றும் மாடுகள் மலட்டுத்தன்மை அடைகிறது. இவ்வுயிரி மாடு மற்றும் காளையின் இனப்பெருக்க உறுப்புகளில் காணப்படும்.
அறிகுறிகள்
பாதிப்பின் ஆரம்பத்தில் வெள்ளை நிற திரவம் மாடுகளின் இனப்பெருக்க உறுப்புகளில் இருந்து வெளியேறும். சினையாக முடியாத தன்மை ஏற்படும்.
தடுப்பு முறைகள்
செயற்கைக் கருத்தரிப்பின் மூலம் இது பரவுவதைத் தடுக்கலாம்.
காளைகளைக் கலப்பிற்கு பயன்படுத்தும் முன்பு நன்கு பரிசோதிக்க வேண்டும்.
இது காளையினால் பரவுவதாகையால் ஒரு முறை பாதித்தால் அது கடைசி வரை காளைக்குள்ளேயே தங்கிவிடும்.
கருத்துகள் இல்லை