அசோலா பெரணி வகையைச் சார்ந்த நீரில் மிதக்கும் தாவரம். பெரும்பாலும் பச்சை அல்லது இலேசான பழுப்பு நிறத்தில் காணப்படும். இதனை மூக்குத்திச் செடி அல்லது கம்மல் செடி என்றும் அழைப்பர். இதில் புரதச்சத்து 25-35%, தாதுக்கள் 10-12% மற்றும் 7-10% கார்போஹைட்ரேட் கொண்டுள்ளது.
அசோலா உற்பத்தி முறை
சமமான நிலம் மற்றும் மர நிழல் உள்ள இடத்தை தேர்வு செய்ய வேண்டும்.
அசோலா வளர்ப்பு
செங்கல்களை பக்கவாட்டில் அடுக்கி 6மீ x 3மீ அளவுள்ள தொட்டி போல் அமைத்துக் கொள்ளவேண்டும். அதன் மேல் தார்பாயை பரப்பி விட வேண்டும். தார்பாயின் மீது 10-15 கிலோ சுத்தமான செம்மண்ணை சம அளவில் பரப்பிவிட வேண்டும்.
தண்ணீர் சுமார் 6-9 குடம் ஊற்ற வேண்டும். அதாவது 10 செ.மீ வரை தண்ணீர் இருக்க வேண்டும்.
புதிய சாணம் 2 கிலோ மற்றும் வேப்பம் புண்ணாக்கு 50 முதல் 100 கிராம்வரை போட்டு 10 லிட்டர் நல்ல தண்ணீரில் கலந்து ஊற்ற வேண்டும்.
விதை
500 கிராம் - 1 கிலோ அசோலா விதைகளை அதன் மேல் தூவி லேசாக தண்ணீர் தெளிக்கவும்.
அசோலா வளர்ச்சி
ஒரு வாரத்தில் அசோலா நன்றாக வளர்ந்து தொட்டி முழுவதும் பரவி இருக்கும்.
உரம்
புதிய சாணம் 1கிலோகலந்த கலவையை ஒவ்வொரு 5 நாட்களுக்கு ஒரு முறை தொட்டியில் இடவேண்டும்.
பராமரிப்பு
சூரிய ஒளி மிதமான அளவில் இருக்க வேண்டும்.
தினம் குச்சியை கொண்டு கிளரிவிட வேண்டும்.
மாதம் ஒரு முறை மண்ணை மாற்றி புதிய மண்ணை இடவேண்டும்.
10 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீரை மாற்றி புதிய தண்ணீரை ஊற்ற வேண்டும்.
ஆறு மாதத்திற்கு ஒரு முறை அசோலா வளர்ப்பு தொட்டியை சுத்தம் செய்ய வேண்டும்.
அறுவடை
15 நாட்களுக்கு பின் அறுவடை செய்யலாம். தினமும் 500 கிராமிலிருந்து 1 கிலோ வரை அறுவடை செய்யலாம்.
தீவனம் அளிக்கும் முறை
தினமும் 1.5 - 2 கிலோ அசோலாவை எடுத்து நீரில் அலசிக்கொள்ள வேண்டும். தனியாகவோ அல்லது அடர் தீவனத்துடன் கலந்தும் கொடுக்கலாம். உணவுக்கு பயன்படுத்தும் உப்புடன் சேர்த்தும் அளிக்கலாம்.
அசோலா பயன்கள்
1 கிலோ அசோலா 1 கிலோ புண்ணாக்கிற்கு சமம். அசோலாவை உட்கொள்வதால் பால் உற்பத்தி 15-20% அதிகரிக்கும். பாலில் கொழுப்பு சத்துக்கள் அதிகரிக்கும்.
கருத்துகள் இல்லை