கன்று ஈன்றவுடன் மாடுகளில் 3-8 மணி நேரத்தில் நஞ்சுக்கொடி தானாகவே வெளித்தள்ளப்பட்டு விழுந்துவிடும். ஆனால் சில சமயங்களில் 8-12 மணி நேரம் கழித்தும் விழாமல் இருந்தால் இதற்கு நஞ்சு தங்குதல் என்பர். சத்து குறைபாடு காரணமாகவும் ஏற்படுகிறது.
அறிகுறிகள்
மாடுகள் சோர்வாகவும், தீவனம் உண்ணாமல் இருக்கும்.
மாடுகளுக்கு காய்ச்சல் ஏற்படும்.
மாடுகள் நஞ்சுக்கொடியை வெளித்தள்ள நேரம் ஆகிவிட்டால் துர்நாற்றம் அடிக்க ஆரம்பித்துவிடும். ஈக்கள் மொய்க்க ஆரம்பித்து விடும்.
தடுப்பு முறைகள்
கால்நடை மருத்துவரை கொண்டு மாடுகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்.
ஊட்டச்சத்து நிறைந்த தீவனங்களை சினை காலத்தில் கொடுக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை