சரஸ்வதி பூஜையன்று பூஜை ஆரம்பிக்கும் முன் மஞ்சளில் விநாயகரை பிடித்து விநாயகருக்கு குங்குமம், அருகம்புல் மற்றும் மலர்கள் சமர்பிக்க வேண்டும்.
நாம் பயன்படுத்தும் கல்வி அல்லது கணக்கு புத்தகங்களில் பொட்டு வைத்து சரஸ்வதிதேவி படத்தின் முன் வைக்க வேண்டும். வீடுகளிலும், அலுவலகங்களிலும் சரஸ்வதி படத்துக்கு சந்தனம் தெளித்து மஞ்சள்-குங்குமம் பொட்டு வைத்து, மல்லிகை பூ, வெண்தாமரை வைத்து அலங்கரிக்க வேண்டும்.
சுண்டல், சக்கரைப் பொங்கல், வடை, பொறி, கடலை, அவல், நாட்டுசக்கரை, பழங்கள் ஆகியவற்றை நெய்வேத்தியங்களாக வைத்து பூஜிக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை