பிறந்த குழந்தைகள் (0 முதல் மூன்று மாதங்கள் வரை)
புதிதாக பிறந்த குழந்தைகள் நாளொன்றுக்கு 14 லிருந்து 17 மணிநேரம் வரை தூங்க வேண்டும்.
ஒரு நாளுக்கு 19 மணி நேரங்களுக்கு மேல் தூங்கவிடக்கூடாது.
குழந்தைகள் (4-முதல் 11 மாதம் வரை)
தினசரி 12 லிருந்து 15 மணி நேரங்கள் வரை தூங்கவேண்டும்.
குறைந்தது 10 மணி நேரங்கள் தூங்கினால் கூட போதும்.
ஆனால் 18 மணி நேரங்களுக்கு மேல் தூங்கக் கூடாது.
தளிர்நடை பயிலும் குழந்தைகள் (1 லிருந்து 2 வயது வரை)
தினமும் 11 லிருந்து 14 மணி நேரங்கள் வரை தூங்கலாம்.
ஆனால் 16 மணி நேரங்களுக்கு மேல் தூங்கக் கூடாது.
பள்ளி செல்லும் குழந்தைகள் (3 லிருந்து 5 வயது வரை)
தினமும் 10 லிருந்து 13 மணி நேரங்கள் தூங்கவேண்டும்.
ஆனால் 8 மணி நேரங்களுக்கு குறைவாகவோ அல்லது 14 மணி நேரங்களுக்கு மேலாகவோ தூங்குவது பொருத்தமற்றது என்று கூறப்படுகிறது.
பள்ளி செல்லும் சிறுவர்கள் (6 லிருந்து 13 வயது வரை)
ஒன்பது மணிநேரத்தி லிருந்து 11 மணிநேரம் வரை தினமும் தூங்கவேண்டும்.
தினமும் 7 மணிநேரத்துக்குக் குறைவான அல்லது 12 மணிநேரத்துக்கு மேலான தூக்கம் ஆரோக்கியமானதல்ல.
பதின்பருவச் சிறுவர்கள் (14 முதல் 17 வயது வரை)
தூக்க நேரம் என்பது 8 லிருந்து 10 மணிநேரம் வரைதான்.
இந்த வயது சிறுவர்கள் தினமும் 11 மணி நேரங்களுக்கு மேலாகவோ அல்லது 7 மணிநேரங்களுக்கு குறைவாகத் தூங்குவது தவறு.
வயது வந்த இளைஞர்கள் (18 லிருந்து 25 வயது வரை)
தினமும் 7 லிருந்து 9 மணி நேரங்கள் வரை தூங்கலாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது.
ஆனால் தூக்கம் 6 மணிநேரத்துக்குக் குறைவானதாகவோ அல்லது 11 மணி நேரங்களுக்கு மேலோ போகக்கூடாது.
வயது வந்தவர்கள் (26 லிருந்து 64 வயது வரை)
மேலே குறிப்பிடப்பட்ட வயது வந்த இளைஞர்களுக்கான அதே பரிந்துரைதான் இவர்களுக்கும்.
கருத்துகள் இல்லை