மாட்டுப் பொங்கலன்று திருவள்ளுவர் தினமும் வருகின்றது. நாத்திகர்களாலும் மறுக்க முடியாத தெய்வப் புலவர் திருவள்ளுவர்.
உலக பொதுமறை எனப்படும் திருக்குறளை கடவுள் வாழ்த்தோடு தொடங்கி காதலுடன் நூலை நிறைவு செய்கின்றார், திருவள்ளுவர்.
"உண்டது செரித்ததை உணர்ந்து உண்போர்க்கு மருந்தே தேவையில்லை" என்று அன்றே சொன்ன மருத்துவ வல்லுநர் திருவள்ளுவர்.
நீதி, நேர்மை, உண்மை, துறவு, அரச நீதி, காதல் என்று அவர் பாடாத விஷயமே இல்லை.
திருவள்ளுவர் தினத்தன்று வள்ளுவர் கூறிய அறநெறிப் பாடல்களை நாமும் ஓதி, இளைய சமுதாயத்தினருக்கும் அவற்றின் பொருள்களை உணர்வித்தலே உண்மையான "வள்ளுவ பூஜை"யாகும். இந்நன்னெறியை தமிழர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
கருத்துகள் இல்லை