பாலில் உள்ள சத்துக்கள்
100 மில்லி பசும்பாலில்
* புரதம் - 3.2 கிராம்
* கார்போஹைட்ரேட் - 4.4 கிராம்
* கொழுப்பு - 4.1 கிராம்
* கால்சியம் - 120 மில்லி கிராம்
* வைட்டமின் ஏ - 90 இ.யூ
* ஆற்றல் - 67 கிலோ கலோரி
பசும்பாலில் அனைத்துவித அமினோஅமிலங்களும் உள்ளன. கால்சியம் நிறைந்தது. பாலில் உள்ள லாக்டிக் அமிலம், உடலுக்குத் தேவையான புரதம், நார்ச்சத்துக்களை உறிஞ்ச உதவுகிறது.
பால் வகைகள்
பாலில் உள்ள புரதத்தின் அடிப்படையில் பால் இரண்டு வகைப்படும்.
1. ஏ1 பால்
2. ஏ2 பால்
ஏ1 பால்
ஏ1 வகை பீட்டா கேசின் என்ற புரதம் பால்களில் காணப்படுகிறது. இதனால் இதற்கு ஏ1 பால் என்று பெயர். அயல் நாட்டுப் பசுக்களின் பால்களில் ஏ1 புரதம் அதிகம் காணப்படுவதால் ஏ1 பால் என்கிறோம்.
ஏ2 பால்
ஏ2 பால் என்பது ஏ2 வகை பீட்டா கேசின் என்ற புரதம் பால்களில் காணப்படுகிறது. இது நாட்டுமாட்டுப் பால்களில் அதிகம் காணப்படுகிறது. இப்பாலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது.
தயிர்
தயிர் என்பது உறை ஊற்றி புளிக்க வைத்த பால் பொருள். நமது இந்திய உணவு வகைகளில் பெரும் பங்கு வகிக்கின்றது. வெண்ணெய், நெய், மோர் தயாரிக்க மூலப் பொருளாக இருக்கின்றது. கால்சியம், புரதம், கொழுப்பு, மாவுச்சத்து, கலோரி, பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் ஏ, ரிபோஃப்ளோவின், தாதுஉப்புகள் மிதமான அளவில் உள்ளன.
மோர்
மோர் பாலில் இருந்து பெறப்படும் நீர்மப் பொருட்களில் ஒன்று. தயிரிலிருந்து வெண்ணெயை அகற்றிய பின் கிடைக்கும் நீர்மப்பொருள் மோர் ஆகும்.
குறைவான கலோரி கொண்டது. 80 சதவிகிதம் நீரும், மிகச்சிறிய அளவில் புரதமும் கார்போஹைட்ரேட்டும் உள்ளன.
நல்ல ஜீரண சக்தியைக் கொடுக்கும். நீர்ச்சத்து அதிகம் என்பதால், நாக்கு வறட்சியைப் போக்கும். குளிர்ச்சியைத் தரும்.
வெண்ணெய்
வெண்ணெய் என்பது தயிர் அல்லது நொதிக்கப்பட்ட பாலேட்டைக் கடைவதன் மூலம் பெறப்படும் பால் பொருளாகும். இதில் அதிகளவு புரதச்சத்து காணப்படுகிறது.
வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது. வாய்ப் புண்ணை உடனடியாகக் குணமாக்கும்.
நெய்
பால் பொருட்களில் கூடுதல் சுவையையும் நறுமணத்தையும் கொண்டது நெய் ஆகும்.
தனியாகப் பிரித்தெடுத்த வெண்ணெய் அல்லது பால்கொழுப்பை உருக்கும்போது நெய் உருவாகின்றது. நெய்யில் செறிவுற்ற கொழுப்பு அமிலங்கள் உள்ளது.
பாலாடைக்கட்டி
பாலாடைக்கட்டி என்பது பாலை உறைய வைத்து, பாலிலுள்ள புரதத்தை தகுந்த முறையில் கெட்டியான கட்டிகளாக மாற்றுவது ஆகும். இதில் அதிக புரதச் சத்து உள்ளது.
உடல் வளர்ச்சிக்கும் எலும்புகள் உறுதியாக இருப்பதற்கும் பயன்படுகிறது. இரும்பு சத்து மிதமான அளவில் இருக்கிறது.
பால் பவுடர்
முழுப் பால் சுமார் 87.5 சதவிகித நீர் உள்ளடக்கம் கொண்டது. பாலில் உள்ள நீர்த் தன்மையை அகற்றி, பால்பவுடர் தயாரிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை