வேலிமசால்!

இடம்

              பாசன வசதியுள்ள இடங்களில் வருடம் முழுவதும் வரும். மானாவரியில் ஜீன் - அக்டோபர் மாதங்களிலும் பயிரிடலாம்.


விதை

              ஒரு ஹெக்டருக்கு 20 கிலோ விதையை 2 செ.மீ. ஆழத்தில் விதைகளை ஊன்றி மண்ணை கொண்டு மூடிவிட வேண்டும்.


நீர் மேலாண்மை

              விதைப்பு செய்தவுடன் நீர்ப்பாய்ச்ச வேண்டும். பிறகு 3வது நாளும் மற்றும் வாரத்திற்கு ஒரு முறை நீர்ப்பாசனம் செய்ய வேண்டும்.


பயிர் பாதுகாப்பு

               மேம்படுத்தப்பட்ட அமிர்தகரைசலை 15 நாட்களுக்கு ஒரு முறை தெளிப்பதன் மூலம் பயிர் வேகமாக வளரும் மற்றும் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.


அறுவடை

               விதைத்து 90 நாட்களுக்கு பின் அறுவடை செய்யலாம். பிறகு மறு தாம்பு பயிர் 40 நாட்கள் இடைவெளியில் அறுவடை செய்யலாம். 50 செ.மீ வளர்ந்த பின்பு அறுவடை செய்ய வேண்டும்.

கருத்துகள் இல்லை