கருச்சிதைவு நோயானது பாக்டீரியா நுண்கிருமியால் ஏற்படுகிறது. இந்நோயானது அதிக பால் தரும் கலப்பின பசுக்களில் அதிகளவு காணப்படுகிறது.

                இந்நோயால் கன்று வீச்சு, நஞ்சுக்கொடி தங்குதல், மீண்டும் எளிதில் சினை பிடிக்காமை, பால் உற்பத்திக் குறைவு போன்ற பல காரணங்களால் இழப்பு ஏற்படுகிறது.

                இந்நோய் நோயுற்ற மாட்டின் நஞ்சுக் கொடி, இரத்தப் போக்கு போன்றவற்றை கையில் தொட்டு சுத்தம் செய்வதன் மூலமாகவும் மனிதர்களுக்குப் பரவுகிறது. இந்நோய் பாதிக்கப்பட்ட மாட்டின் பாலை நன்கு கொதிக்க வைத்தபின் பருகவேண்டும்.

அறிகுறிகள்

                  இந்நோய் காரணமாகச் சினை மாடுகளில் கருப்பையில் நோய் ஏற்பட்டு, கருத்தரித்த 5 முதல் 8 மாத காலம் வரையிலும் கன்ற வீச்சு ஏற்படும்.

                  கன்று வீச்சு ஏற்பட்டபின் நஞ்சுக் கொடி கருப்பையில் இருந்து வெளி வராமல் தங்கி விடும். இதனால் பசுவின் அறை அல்லது பெண் பிறப்புறுப்பிலிருந்து சீழ் போன்ற திரவம் வடியும்.

                 கருச்சிதைவுற்ற மாடுகள் சினைக்கு வர கால தாமதம் ஆகும். சினை பிடிக்காது.

தடுப்பு முறைகள்

              கால்நடைகளுக்கு ஆறு மாதத்திற்கு ஒரு முறை இரத்தப் பரிசோதனை செய்து இந்நோய் இருப்பின் உடனடியாக பண்ணையிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும்.

              புதியதாக மாடு வாங்குவேர் இரத்தப் பரிசோதனை செய்த பிறகு வாங்க வேண்டும்.

              கன்று இறந்த பிறகு நஞ்சு, இரத்தம் போன்றவற்றை அகற்றும் போது கைக்கு உறை அணிந்து அகற்ற வேண்டும். இறந்த கன்று பயன்படுத்திய வைக்கோல் போன்ற பொருட்களை எரித்து விட வேண்டும்.

              நோயுற்ற பசுக்களை இனவிருத்திக்கு அனுமதிக்கக்கூடாது.

             அதே போல் எல்லாக் கிடேரிக் கன்றுகளுக்கும் 6-9 மாத வயதில் இந்நோய் வராமல் தடுக்க தடுப்பூசி போடவேண்டும்.

கருச்சிதைவு நோய் | அறிகுறிகள் | தடுப்பு முறைகள்

கருத்துகள் இல்லை