மாதவிடாய் ஏற்படும் அந்த மூன்று நாட்கள் பெண்கள் விதவிதமான உபாதைகளுக்கு உள்ளாகின்றனர். சிலருக்கு அதிக உதிரப் போக்கு, சிலருக்கு அதி பயங்கர வயிற்று வலி இன்னும் சிலருக்கு மாதவிடாயுடன் அலுவலகம் செல்லும் அவதி. இன்னும் சிலருக்கு நேப்கின்களால் ஏற்படும் அலர்ஜி என இது போன்ற பல அவதிகளுக்கு ஆளாகிறார்கள்.
உங்கள் மகள் வயதுக்கு வருவதற்கு முன்பே இது சம்பந்தமான விஷயங்களை அவளிடம் பேசுங்கள். அவளுக்கு ஏற்கெனவே என்ன தெரிந்திருக்கிறது என்பதைக் தெரிந்துகொள்ளுங்கள். உங்கள் அனுபவங்களைப் பற்றிச் சொல்லிக்கொடுங்கள்.
மாதவிடாய் காலத்தில் சுத்தமாக இருப்பது என்பது மிகவும் அவசியமான ஒன்று. கைகளையும், உடுத்தும் உடைகளையும் சுத்தமாக வைத்துக்கொள்வது நல்லது. வெளியிடங்களுக்குச் செல்லும்போதும், பள்ளி, கல்லூரிக்குச் செல்லும்போதும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
பொதுவாக 13-19 வயது வரையிலான பருவத்தை 'டீன்-ஏஜ்' என்கிறோம். இந்த டீன்-ஏஜ் பருவம் என்பது மிகவும் வாழ்வில் முக்கியமான காலகட்டம். இந்தியாவில், டீன்-ஏஜ் பெண்களின் எண்ணிக்கை, 25 கோடிக்கும் அதிகமாக உள்ளதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.
இந்த காலகட்டத்தில், பெண்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல்வேறு மாறுதல்களை சந்திக்கின்றனர். அதனால், பெற்றோராகிய நீங்கள், குழந்தைப் பருவத்தில் எவ்வளவு அக்கறையோடு கவனித்தீர்களோ அதேபோல், இந்தப் பருவத்திலும் கவனிக்க வேண்டியது மிகவும் அவசியம்.
கருத்துகள் இல்லை