கன்றுகள் பிறந்தவுடன் அவற்றின் மேல் உள்ள அதாவது மூக்கு, வாய்ப்பகுதியிலுள்ள கோழையினை நீக்கிவிட வேண்டும். அதை தாய் மாடுகளே பார்த்துக்கொள்ளும். அந்த கோழைகளை தாய் மாடுகளே நக்கி உலர்த்திவிடும். அதனால் கன்றுகளின் சுவாசமும், இரத்த ஓட்டமும் சீராக்கப்படும்.

             ஒருவேளை தாய் மாடு கன்றுகளை நக்கவில்லை என்றால், அவற்றை உலர்த்த துணி அல்லது கோணிப்பையால் நன்றாக துடைத்து விட வேண்டும்.

             கன்றுக்குட்டி நன்றாக மூச்சுவிட ஆரம்பித்த பிறகு அவற்றின் தொப்புள் கொடியை துண்டித்து மருத்துவம் செய்ய வேண்டும். அதாவது தொப்புள் கொடியின் அடிப்பாகத்திலிருந்து 25 செ.மீ விட்டு, கிருமி நாசினியால் நனைக்கப்பட்ட ஒரு நூலில் முடிப்போட்டு 1 மீட்டர் நீளத்தை விட்டு துண்டிக்க வேண்டும். கொட்டகையிலுள்ள ஈரமான படுக்கைப் பொருட்களை நீக்கிவிட்டு, கொட்டகையை சுத்தமாகவும் ஈரம் இல்லாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும்.

             கன்றுக்குட்டிகள் பிறந்தவுடன் மூச்சுத்திணறினால் அவற்றை ஓரிரு நிமிடம் தலைகீழாக பிடித்தால் சரியாகிவிடும். கன்று போட்ட 12 மணி நேரத்தில் சீம்பாலைக் குடிக்க வைக்க வேண்டும். மேலும் சீம்பாலை அதிகமாக குடிக்க விடக்கூடாது. இதனால் கன்றுகளுக்கு ஒவ்வாமை ஏற்படும். சீம்பாலுக்கு மாற்றாக முட்டை ஒன்று, தண்ணீர் 100 மில்லி, விளக்கெண்ணெய் அரை ஸ்பூன், பால் 500 கிராம் என்ற அளவில் கலந்து கொடுக்கலாம்.

             கன்று ஈன்ற மாடுகளுக்கு 5 நாட்களில் சீம்பால் நின்று விடும். அதன்பிறகு தினமும் 3 லிட்டர் பால் கன்றுகளுக்கு தேவைப்படும். இதனை காலை, மாலை என பிரித்து வழங்கலாம். மேலும் கன்று பிறந்த 5 முதல் 10 நாட்களில் அவற்றிற்கு குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும்.

பிறந்த கன்றுகளை பராமரிக்கும் முறை !

கருத்துகள் இல்லை