இந்நோய் மாடுகளின் வயிற்றில் நொதித்தல் மூலம் உண்டாகும் அதிகப்படியான வாயுவினால் வயிறு உப்புசம் ஏற்படுகிறது. இந்த நோயினால் மாடுகள் எவ்வித செயல்களிலும் ஈடுபடாமல் இருக்கும்.
அறிகுறிகள்
இந்த நோய்த்தாக்குதல் ஏற்பட்டால் மாடுகள் உணவு எடுத்துக்கொள்ளாமல் இருக்கும். மேலும் அசைபோட முடியாமலும், செரிமானம் ஆகாமலும் அவதிப்படும். மேலும் மாடுகள் கால்களை தரையில் வேகமாக அடித்து உதைத்து சிரமப்படும். ஒற்றுப்போகாத தீவனங்களை மாடுகள் எடுத்துக்கொள்ளுவதால் அவற்றில் உள்ள வாயுக்களால் இது நேரிடலாம்.
தடுப்பு முறைகள்
இதற்கு தீர்வாக மாடுகளுக்கு அதிகமாக பயறுவகை தீவனங்களை அளிக்காமல் இருக்க வேண்டும்.
இளம் பசுந்தீவனங்களை தவிர்த்து, முதிர்ந்த தீவனங்களை மாடுகளுக்கு அளிக்கலாம்.
தீவனம் அளிக்கும் போது ஒரு குறிப்பிட்ட அளவு அடர்தீவனங்களை உலர் தீவனங்களுடன் கலந்து அளிக்கலாம்.
தானிய தீவனங்களை ஓரளவிற்கு அரைத்து கொடுக்க வேண்டும். அதாவது மாவு போன்ற அரைத்த தீவனங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
கருத்துகள் இல்லை