இந்நோயில் மாடுகள் எழ முடியாத நிலை காணப்படும். இந்நோய் பொதுவாக அயல் இன மாடுகளிலும், கலப்பின மாடுகளிலும் காணப்படுகிறது. கன்று ஈன்ற பிறகு இந்நோய் காணப்படும்.

அறிகுறிகள்

             மாடுகள் எழுந்திருக்க முடியாத நிலையில் இருக்கும். இது மாடுகளுக்கு கால்சியம் சத்து குறைபாட்டால் ஏற்படுகிறது.

             பால் காய்ச்சல் நோயின் காரணமாக கூட எழ முடியாத நிலை ஏற்படுகிறது.

             மாடு ஆரோக்கியமாக இருப்பது போன்று தோன்றும். ஆனால் மாடுகள் எழுந்து நிற்க முடியாது.

தடுப்பு முறைகள்

              மாடுகளுக்கு அதிகமாக தீவனம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். ஆனால் சத்து நிறைந்த தீவனத்தை மாடுகளுக்கு கொடுக்க வேண்டும்.

              பால் காய்ச்சலை கண்டறிந்து ஆரம்பத்திலே சிகிச்சை அளிப்பதன் மூலம் இந்நோயை கட்டுப்படுத்தலாம். கன்று ஈன்ற மாடுகளை சிறிது நேரமே நிற்க விட வேண்டும்.

             பால் காய்ச்சலால் அதிகம் பாதித்த மாடுகளுக்கு முறையான சிகிச்சை அளிக்க வேண்டும்.

            மாடுகளை எழ முயற்சி செய்ய வைக்க வேண்டும்.

            பாதிக்கப்பட்ட மாடுகளுக்கு படுத்திருக்க வசதியாக வைக்கோல்களைப் பரப்பி வைக்க வேண்டும்.

            மாடுகளின் முன்னங்கால் மற்றும் பின்னங்கால்களை நீவி விடவேண்டும்.

            மற்ற மாடுகளில் பால் கறப்பது போல் இவற்றிலும் பால் கறக்க வேண்டும். பால் கறக்கும் முன் மடி மற்றும் காம்புகளை சுத்தமாக கழுவி பால் கறக்க வேண்டும்.

            கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், குளுக்கோஸ் போன்ற சத்துகளை ஊசி வழியாக தகுந்த கால்நடை மருத்துவரைக் கொண்டு மாடுகளுக்கு அளிக்கவேண்டும்.

மாடுகள் எழ முடியாத நோய் | அறிகுறிகள் | தடுப்பு முறைகள்

கருத்துகள் இல்லை