பிரசவத்திற்குப் பின்னர் ஒருபெண் தாய் என்ற தகுதியை அடைகிறாள். தன் உடலையும்பாதுகாத்து, குழந்தையின் நலனிலும் அக்கரை காட்டவேண்டும்.
குழந்தையின் ஆரோக்கியத்திற்கு தாய்பால் தான் மிகவும் நல்லது அதை நினைவில் வைக்க வேண்டும். பாலூட்டும் தாய்மார்கள், தங்களது பால் தேவையை பூர்த்தி செய்ய தினசரி 74 கிராம் புரோட்டின் எடுத்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
உங்களுக்கு தேவையான புரோட்டின் ஆனது மாமிசங்கள், மீன், முட்டைகள், விதைகள், பால் பொருட்கள் ஆகியவற்றில் இருந்து கிடைக்கிறது. இந்த உணவுகளை உட்கொள்வதன் மூலம் குழந்தைக்கும் இந்த சத்துக்கள் சென்றடையும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
தாய்ப்பால் அளிப்பதால் அம்மாவின் உடல்வாகு சீர்கெட்டுவிடும் என்பது வெறும் கட்டுக்கதையே. மாறாக, உடல் மற்றும் மனதளவில் பல நன்மைகள் மட்டுமே இருக்கின்றன.
கருப்பை சுருக்கம்
தாய்ப்பால் கொடுப்பதால், தாயின் கருப்பை வேகமாகச் சுருங்கும். குழந்தை பேருக்கு முன்பிருந்தது போன்று மாற அடிக்கடி தாய்ப்பால் கொடுப்பது நல்லது.
உடல் எடையை கட்டுக்குள் வைக்கும்
தாய்ப்பால் கொடுப்பதால், பிரசவத்திற்கு பிறகு உடல் எடை ஏராமல் தடுக்க முடியும்.
இதய நோய் பாதிப்பைத் தவிர்க்கும்
அடிக்கடி தாய்ப்பால் கொடுப்பதால், இதயம் பாதுகாக்கப்படுகிறது மற்றும் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பும் குறைகிறது என்று ஆய்வுகள் தெரிவிகின்றன.
புற்று நோயில் இருந்து பாதுகாப்பு
கர்ப்பப்பை புற்று நோயிலிருந்தும் மார்பகப் புற்றுநோயிலிருந்தும் காக்கிறது.
கருத்துகள் இல்லை