காங்கேயம்

             தென் இந்தியாவின் அடையாள சின்னமாக காங்கேயம் காளைகள் போற்றப்படுகின்றன.

பூர்வீகம்

             காங்கேய மாடு தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் பகுதியிலிருந்து தோன்றியது.

நிறம் மற்றும் தோற்றம்

              பிறக்கும்போது இம்மாட்டினங்களின் தோல் சிவப்பு நிறமாக இருக்கும். பின் ஆறு மாத வயதில் சாம்பல் நிறமாக மாறிவிடும்.

              காளை மாடுகள் சாம்பல் நிறத்துடன் கூடிய முதுகுப் பகுதியை கொண்டவையாகும். வலிமையான உயர்ந்த திமில், லேசாக மேல் நோக்கி வளைந்த கொம்பு, கம்பீர நடை மற்றும் பார்வை கொண்டது.

              கடுமையான காலநிலைக்கும், உள்ளூர் சூழ்நிலைக்கு ஏற்பவும் தகவமைத்து வாழக்கூடியவை.

              பசு மாடுகள் சாம்பல் மற்றும் வெள்ளை நிறத்துடன் காணப்படும். இவற்றின் கண்கள் அடர்த்தியான நிறத்துடன், அவற்றை சுற்றி கருவளையங்கள் காணப்படும். இந்த இனமானது உழவிற்கும், வண்டி இழுக்கவும் ஏற்றதாகும்.

பால் உற்பத்தி

                காங்கேயம் பசுக்களின் பாலில் உயர்தரமான சத்துக்கள் காணப்படுகின்றது. ஒரு நாளைக்கு சராசரியாக 1.8 லிட்டரிலிருந்து 2.0 லிட்டர் பால் வரை கொடுக்கும் தன்மை கொண்டது.

காங்கேயம் | பூர்வீகம் | நிறம் மற்றும் தோற்றம் | பால் உற்பத்தி

கருத்துகள் இல்லை