இந்நோய் ஏக்டினோமைசிஸ் போவிஸ் என்ற உயிரியால் பரவுகிறது. புற்களை உண்ணும் போது, அவை மாடுகளின் வாய் ஓரங்களில் சிறிது கிழித்துவிடுகிறது. இந்த காயங்கள் வழியே இவ்வுயிரி புகுந்து கொள்கிறது.
அறிகுறிகள்
மாடுகளின் தொடையில் பெரிய கட்டி உருவாகும். சில மாதங்களில் கட்டி பெரியதாகி உடைந்து மஞ்சள் நிற சீழ் வடியும்.
இந்நோய் பாதிப்பதால் மாடு மூச்சுவிட சிரமப்படும். வாய்களில் புற்கள் கிழித்துவிடுவதால் உணவை மெல்லுவதற்கு சிரமப்படும். இதனால் மாடு உணவு உட்கொள்ளாது.
தடுப்பு முறைகள்
கட்டிகள் காணப்படும் மாடுகளை தனியாக கொட்டகையில் வைத்து பராமரிக்கலாம்.
கால்நடை மருத்துவரை அணுகி பாதிக்கப்பட்ட மாடுகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை