கிர் பசு

               கிர் பசு மாட்டினம் குஜராத்தி, கத்தியவாரி, தேசன், சோர்தி மற்றும் சூரத்தி போன்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. கிர் இனம் இந்திய இனங்களில் அதிக பால் கொடுக்கும் இனமாகும்.

பூர்வீகம்

                 இம்மாட்டின் பூர்வீகம் குஜராத்தின் தெற்கு கத்தியவார் பகுதியிலுள்ள கிர் காடுகளாகும்.

நிறம் மற்றும் தோற்றம்

                இதன் தோல் வெள்ளை நிறத்துடன், அடர்ந்த சிவப்பு நிற அல்லது சாக்லேட் பழுப்பு நிற திட்டுக்களுடன் காணப்படும். சில சமயங்களில் கருப்பு அல்லது முழுவதும் சிவப்பு நிறமாகவும் காணப்படும், வெள்ளை நிறத்துடனும் காணப்படும்.

                 கொம்புகள் சிறிது பின் நோக்கி வளைந்து பின் பக்கவாட்டில் பெரியதாகவும் வலுவானதாகவும் வளரும். கொம்புகள் வளைந்து, அரை வட்ட நிலா போன்று இருக்கும். காதுகள் சுருண்டும் நீண்டும் காணப்படும். அதிக சாதுவான இனம் இதுதான்.

பால் உற்பத்தி

                    ஒரு நாளைக்கு சராசரியாக 10-18 லிட்டர் பால் கொடுக்கும். கொழுப்புச்சத்து 4.4%. முதல் முறை கன்று ஈனும் வயது சராசரியாக 45-54 மாதங்களாகவும், கன்றுகள் ஈனுவதற்கான இடைவெளி சராசரியாக 530-590 நாட்களாக இருக்கும்.

கிர் பசு | பூர்வீகம் | நிறம் மற்றும் தோற்றம்

கருத்துகள் இல்லை