பொதுவாக பால் பண்ணை அமைக்க கூட்டுறவு சங்கம் கடன் உதவி வழங்குவதில்லை, வங்கிகள் தான் வழங்குகின்றன. வங்கிகளுக்கு ஏற்ப கடன் தொகை, அதற்கு வட்டி மற்றும் அதை திருப்பிச் செலுத்தும் கால அவகாசம் மாறுபடுகின்றன.
கடனுதவி
இந்தக் கடன் உதவியானது அதிக பால் கொடுக்கும் மாடுகள் வாங்குவதற்கு முன் உரிமை அளிக்கப்படுகிறது. மேலும் கொட்டகை அமைத்தல், பண்ணைக்கான இயந்திரங்கள் வாங்குதல் மற்றும் மாடுகளை வெளியூரில் வாங்கி இருந்தால், அதை கொண்டு வருவதற்கான போக்குவரத்து செலவுகள், தீவனம் வாங்குதல் போன்றவைகளும் கடனுதவியில் அடங்கும்.
மொத்த செலவில் 80 சதவீதம் வரை கடனுதவி வழங்கப்படும், மீதமுள்ள தொகையை நாம் முதலீடு செய்ய வேண்டும். அந்த கடன் தொகையை ஒரே பாகமாக வழங்கமாட்டார்கள். இரண்டு முதல் நான்கு பாகமாக வழங்கப்படும்.
தகுதி
தனிநபர் அல்லது குழுவாக உள்ள விவசாயிகள், பால் பண்ணையில் முன் அனுபவம் பெற்றிருப்போர் மற்றும் அதில் ஆர்வமாக ஈடுபட்டிருப்போர் அனைவரும் தகுதியுடையவர்களாவர்.
பண்ணை அமைக்க சொந்த நிலம் வேண்டுமா?
விண்ணப்பதாரர் மாடுகளுக்கான கொட்டகைகள் அமைப்பதற்கும் மற்றும் அதற்கான உணவு உற்பத்தி செய்வதற்கும், தேவையான நிலபரப்பை வைத்திருக்க வேண்டும். குத்தகை நிலமாக இருந்தால் அதற்கான காலா முடிவு பத்திரம் வைத்திருக்க வேண்டும். நல்ல நீர் வசதி உள்ள நிலமாக இருக்க வேண்டும்.
தனிப்பட்ட சான்று தேவையா?
விண்ணப்பதாரர் குறிப்பிட்ட தொகைக்கு மேல் கடன் பெறுவாராயின், அவர் வங்கிகளுக்கு தனிப்பட்ட முறையில் ஆதாரம் (Security) அளிக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் கறவை மாடு வளர்ப்பு பயிற்சி சான்றிதழ் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்.
விண்ணப்பதாரரின் வயது 65-க்கு உட்பட்டு இருத்தல் வேண்டும். இதுவும் வங்கிகளுக்கு ஏற்ப மாறுபடும்.
கூட்டுறவு பால் சங்கம் அல்லது பிரபல தனியார் பால் நிறுவனங்களுக்கு பால் வழங்குபவராக இருக்க வேண்டும்.
பண்ணையை பார்வை இடுதல்
மாட்டு பண்ணை அமைப்பதற்கு தகுதியான நிலம் பத்திரத்தின் படி சரியாக உள்ளதா, மேலும் அந்த நிலத்தில் நீர் வசதி உள்ளதா என்பதை வங்கிகள் அங்கீகரித்த நில ஆய்வாளர்கள் நேரடியாக நிலத்திற்கு வந்து மதிப்பிடுவார்கள். அதன் அடிப்படையிலேயே கடனுதவி வழங்கப்படும்.
பண்ணைக்கு வங்கி அதிகாரிகளின் ஆய்வு அடிக்கடி இருக்கும். எனவே பண்ணையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
நிலமற்ற மக்களுக்கு கறவை மாடுகள் வாங்க நிதி கிடைக்குமா?
நிலமற்ற கூலித்தொழிலாளிகள் கறவை மாடுகள் வாங்க நிதி பெறலாம்.
தேவை
நிலமற்ற மக்களுக்கு கறவை மாடுகள் வாங்குவதற்கு கடன் வசதி வழங்குதல்.
தகுதி
விண்ணப்பதாரர் கால்நடைகளை வைத்திருப்பதற்குப் போதுமான இடம் வைத்திருத்தல் வேண்டும்.
தொகை
அதிகபட்சமாக ரூ. 50,000 வங்கிக்கு தனிப்பட்ட முறையில் ஆதாரம் வழங்கவேண்டும்.
திருப்பிச் செலுத்துதல்
20 முறை சமமான காலாண்டு தவணைகள் (அசல் மற்றும் வட்டி 5 வருடங்களில்).
கருத்துகள் இல்லை