முக்கண் சுழி / அக்கினி சுழி
மாட்டின் இரு கண்களுக்கும் நடுவில் முக்கோண வடிவில் காணப்படும் இந்த சுழி முக்கண் சுழி எனப்படும். இந்த சுழி உள்ள மாடு குடும்பத்தில் பல இடையூறுகளை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
குடைமேல் குடை சுழி
மாட்டின் நெற்றியில் ஒரு சுழியின் மீது மற்றொரு சுழி இருக்கும், இதை குடைமேல் குடை சுழி என்று கூறுவர். இச்சுழி தீமை பயக்கும் சுழியாக கருதப்படுகிறது.
விலங்கு சுழி
மாட்டின் முன்னங்கால் அல்லது பின்னங்கால், பின்புறமோ அல்லது கணுக்காலிலோ சுழித்து இருந்தால் விலங்கு சுழி என்று கூறுவர். இந்த சுழி உள்ள மாட்டை வாங்குபவர், விலங்கிடப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என்பது நம்பிக்கை.
பாடை சுழி
மாடுகளின் முதுகின் பின்பகுதியில், வாலின் முன்பக்கம் அல்லது பின்பக்கமாக காணப்படுவது பாடை சுழி ஆகும். இந்த சுழி மிகவும் ஆபத்தாக கருதப்படுகிறது.
பெண்டிழந்தான் சுழி
மாட்டின் வாலின் உட்பக்கம் மலத்துவாரத்திற்கு நடுவில் ஒன்று அல்லது இரண்டு சுழிகள் இருக்கும். இதற்கு பெண்டிழந்தான் சுழி என்று பெயர். இந்த சுழி உள்ள மாட்டை வைத்து இருப்பவருக்கு, ஆபத்துகள் உண்டாகும் என்பது நம்பிக்கை.
நாகப்பட சுழி
மாட்டின் தொடைகளின் பின் வளைவுகளில் பாம்பு படம் எடுப்பது போன்று சுழி இருந்தால் நாகப்பட சுழி எனப்படும்.
தட்டுச் சுழி
மாட்டின் இடுப்பு சேருமிடத்தில், முதுகில் காணப்படும். இச்சுழி உள்ள மாட்டை வைத்திருப்பவர்கள் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படும்.
துடைப்பை சுழி
மாட்டின் வால் ஆரம்பிக்கும் இடத்தில் உள்பக்கம் இச்சுழி இருக்கும். வீட்டில் உள்ள செல்வத்தை சுத்தமாக துடைத்து விடும்.
புட்டாணிச் சுழி
மாட்டின் இடுப்புக்கும் வால் ஆரம்பிக்கும் இடத்திற்கும் மத்தியில் இருக்கும். மாட்டில் இச்சுழி இருந்தால் மாட்டின் உரிமையாளருக்கு தீமை ஏற்படும்.
படைக்கட்டு சுழி
மாட்டின் உதட்டில் இச்சுழி இருக்கும். இச்சுழியினால் பண்ணையில் உள்ள மற்ற மாட்டிற்கும் உரிமையாளருக்கும் தீங்கு ஏற்படும்.
எச்சுப்புள்ளி
மாட்டின் மலத்தூவாரத்திற்கும் வால் ஆரம்பமாகும் இடத்திற்கும் இடையில் வெண் புள்ளிகள் போன்று காணப்படும். இச்சுழி உள்ள மாட்டின் சொந்தக்காரருக்கு வியாதிகள் ஏற்படும்.
வால் முடங்கிச் சுழி
மாட்டு வாலின் கீழ்ப்புறம் உட்பக்கமாக அமையப்பெற்ற ஒற்றைச் சுழியானது வால் முடங்கி சுழியாகும். இச்சுழியினால் பண்ணையில் உள்ள மற்ற விலங்கிற்கு தீங்கு ஏற்படும்.
இறங்கு நாக சுழி
இச்சுழி வாலின் மேல் காணப்படும். மாட்டின் கீழ்ப்பக்கமாகத் தரை நோக்கி காணப்படும். இச்சுழி உள்ள மாட்டை வைத்திருப்பவர் செல்வம் இழந்து ஏழ்மை நிலை அடைவார்.
கருநாக சுழி
கழுத்தைச் சுற்றி மணிக்கயிற்றை அழகாக கட்டியது போன்று மாட்டில் இருக்கும். மாட்டில் இச்சுழி காணப்பட்டால் இம்மாட்டை வைத்திருப்பவர் துன்பம் அடைவார்.
மென்னிப்பிடி சுழி
மாட்டில் கழுத்தின் கீழ்பக்கத்தின் இரண்டு மயிர்ப்பிளவுகள் மென்னியைப் பிடிப்பது போல் இருக்கும். இம்மாட்டை வைத்திருப்பவருக்கு கஷ்டங்கள் அதிகமாக இருக்கும்.
இறங்கு பூரான் சுழி
மாட்டில் பூரான் போன்ற மயிர் பிளவு முதுகின் மத்தியில் ஆரம்பித்து வால் பக்கம் தொடர்ந்து முடியும்.
கருத்துகள் இல்லை