இந்நோய் பொதுவாக கறவை மாடுகளை பாதிக்கிறது. இது ஆக்டினோமைசிஸ் போவிஸ் எனும் நுண்ணுயிரியால் ஏற்படுகிறது. இந்நோய்கள் மாடுகளுக்கு ஏற்படும் புண்கள் வழியாக நுழைந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது. 2-5 வயது மாடுகள் அதிகம் இந்நோயினால் பாதிப்படைகின்றன.
அறிகுறிகள்
கீழ்தாடை பகுதியில் புண்கள் தோன்றுவது இந்நோயின் முக்கிய அறிகுறியாகும்.
மாடுகளின் தாடை பகுதிகளில் முதலில் வீக்கம் ஏற்பட்டு பின் எலும்பை தாக்கி ஓட்டையை உருவாக்கும்.
மாடுகளின் தாடை பகுதி பாதிக்கப்படுவதால் மாடுகள் அசைப்போடுவது கடினமாக இருக்கும். இதனால் தீவனம் எடுத்துக்கொள்ளும் அளவு குறையும்.
வீக்கம் உடைந்து சீழ் வெளியேறும். வாய் திறக்கும் போது துர்நாற்றம் அடிக்கும். வாயில் பற்கள் ஆடும்.
இந்நோயின் தாக்கும் தீவிரமாகும் போது மாடுகளின் எலும்பு பாதிக்கும்.
தடுப்பு முறைகள்
பாதிக்கப்பட்ட மாடுகளை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கவேண்டும். சுத்தமான நீர் மற்றும் தீவனம் அளிக்க வேண்டும்.
மாட்டுப்பண்ணையையும் அதனைச் சுற்றி உள்ள பகுதியையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
கால்நடை மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை அளிக்கவேண்டும்.
கருத்துகள் இல்லை