சப்பை நோயானது கண்ணுக்கு தெரியாத குளோஸ்டிரிடியம் சாமோசிஸ் எனும் நுண்ணுயிர் கிருமியால் பரவும் ஒரு தொற்று நோய். இந்நோய் வெப்பம் அதிகமாகவும் மற்றும் காற்றின் ஈரப்பதம் கூடுதலாக உள்ள பகுதிகளிலுள்ள மாடுகளை பெரும்பாலும் பாதிக்கிறது. இதுவும் மழைக்கால நோயாகும். நோயினை ஏற்படுத்தும் நுண்ணுயிர் கிருமிகளின் ஸ்போர்ஸ் எனப்படும் வித்துக்கள் மேய்ச்சல் தரையில் காணப்படும். மழைக் காலங்களில் கால்நடைகள் மேயும்போது இவ்வித்துக்கள் உடலினுள் நுழைந்து நோய்க்கிருமிகளாக மாறி நோயினை ஏற்படுத்தும். நோய்க் கிருமிகள் நோய்ப்பட்ட மாடுகளின் சாணத்தின் மூலம் வெளியேறி மேய்ச்சல் தரைகளில் பரவும்.

               ஆரோக்கியமான திடமான இளம் மாடுகளை 6 மாத வயது முதல் 3 ஆண்டு வயது உள்ள கால்நடைகளை அதிகம் பாதிக்கிறது. நல்ல சதைப்பற்றுள்ள இளம் மாடுகளை இந்நோய் அதிக அளவில் தாக்கி பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்துகின்றது.

அறிகுறிகள்

                 இந்த நோய் தாக்கியவுடன் கால்நடைகளுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்படும். இதனால் தொடை அல்லது சதைப்பிடிப்புள்ள பகுதிகளில் வெப்பம் மிகுதியாகவும் வலியோடும், கடினமான தன்மையுள்ள பெருத்த வீக்கம் காணப்படும். கால் நொண்டும், நடக்க சிரமப்படும்.

                அதன் பிறகு வீக்கம் ஏற்பட்டுள்ள இடத்திலுள்ள தோலில் நிறம் கருப்பாகக் காணப்படும். நோய் தாக்கிய 48 மணி நேரத்திற்குள் மருத்துவம் செய்யாமல் போனால், கால்நடைகள் இறந்து விடும்.

தடுப்பு முறைகள்

                  மழைக்காலத்திற்கு முன் கால்நடைகளுக்கு தடுப்பூசிபோட்டுக் கொள்வதே நோயினைத் தடுக்கும் சிறந்த வழியாகும். நோய் அறிகுறிகள் தென்பட்டவுடன் மாட்டைப்பிரித்துத் தனியாக வைத்து கண்காணிக்க வேண்டும். கால்நடை மருத்துவரின் உதவியுடன் உடனடியாக மருத்துவம் செய்யவேண்டும். அவ்வாறு செய்தால் மாட்டை உறுதியாகக் காப்பாற்றிவிடலாம்.

                  நோய் பரவியுள்ள இடங்களிலிருந்து கால்நடைகளை வாங்கி வருவதைத் தவிர்க்க வேண்டும்.

                  நோயினால் இறக்கும் கால்நடைகளை அழமான குழிகளைத் தோண்டி புதைக்க வேண்டும். இறந்த மாட்டின் இடத்தை, கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யவேண்டும்.

சப்பை நோய் அறிகுறிகள் | தடுப்பு முறைகள்

கருத்துகள் இல்லை