மாட்டுத் தொழுவத்துடன் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் அனைத்து கருவிகளையும் சுத்தம் செய்து அலங்கரித்து தேங்காய், பூ, பழம், நாட்டுச் சர்க்கரை என எல்லாம் படைத்து மாட்டுத் தொழுவத்தில் பொங்கலிடுவர்.

              பசு, காளை, எருமை, ஆடுகள் என அனைத்து கால்நடைகளுக்கும் தீபாராதனை காட்டி பொங்கல், பழம் கொடுத்து பூஜைகளை நிறைவு செய்வர். பின்னர் அலங்கரிக்கப்பட்ட மாடுகளைக் கோவிலுக்கு அழைத்துச் சென்று வழிபடுவர்.

              அதன் பின் பசு, காளை, எருமை என அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல், பழம் பிரசாதத்தைக் கொடுப்பார்கள்.

               பொங்கலிட்ட பிறகு எச்சில் தண்ணீர் தெளித்தல் என்றொரு மரபு இந்திய மதுரை மாவட்டத்தில் உண்டு. ‘பொங்கலோ பொங்கல் மாட்டு பொங்கல் பட்டி பெருக பால் பானை பொங்க நோவும் பிணியும் தெருவோடு போக‘ என்று கூறி மாடு பொங்கல் உண்ட எச்சில் தண்ணீரை தொழுவத்தில் தெளிப்பர்.

                வண்டியிழுக்க உதவி செய்வது காளைமாடு ஆகும். காலை மாலை சுவைதரும் பால் தருவது பசுமாடு ஆகும். சில வீடுகளில் கால்நடைகளுக்கு காலையிலேயே பூஜை செய்துவிடுவார்கள். சிலர் மாலையில் விளக்கு வைக்கும் நேரத்தில் பூஜை செய்து அதன்பின் கால்நடைகளை சற்று வெளியே ஓட்டிப் போய் திரும்ப வீட்டுக்கு வருவார்கள்.

                மாட்டை வீட்டுக்கு திரும்பக் கொண்டு வரும்போது வீட்டு நிலைப்படியில் உலக்கையை வைத்து அதைத் தாண்டிப் போகுமாறு அழைத்துச் செல்வது வழக்கம்.

                இப்படி கால்நடைகளுக்கு நன்றி கூறும் நாளைத்தான் மாட்டுப் பொங்கல் என்று கொண்டாடுகின்றனர்.

சாமி கும்பிடும் முறை

கருத்துகள் இல்லை