கறவை மாடுகள் கன்று ஈன்ற பிறகு மாடுகளின் கர்ப்பப்பையின் உட்சவ்வில் நீண்ட நாட்களாக ஏற்படும் பாக்டீரியா தாக்குதல், அதிலிருந்து ஏற்படும் அழற்சியே கர்ப்பப்பையின் உட்சவ்வு அழற்சியாகும்.

               கறவை மாடுகள் காளைகளுடன் சேர்ந்து இனப்பெருக்கம் செய்யும் போதும், சினை ஊசி போடும் போதும், கன்று ஈனும் போதும், கன்று ஈன்ற பிறகும், பாக்டீரியாக்கள் கர்ப்பப்பையின் உட்சென்று அழற்சி ஏற்படுத்தும்.

              கன்று ஈன்றவுடன் நஞ்சுக்கொடி முறையாக வெளியேற்றப்படாமை, கன்று வீசுதல், கன்று ஈனுவதை செயற்கையாகத் தூண்டப்படுதல், ஒன்றுக்கும் மேற்பட்ட கன்றுகளை ஈனுதல், கன்று ஈனுவதில் ஏற்படும் சிரமங்கள் போன்ற காரணங்களும் கர்ப்பப்பையில் அழற்சி ஏற்படுத்தும் காரணிகள் ஆகும்.

அறிகுறிகள்

             கறவை மாடுகளின் பிறப்புறுப்பிலிருந்து வெள்ளை நிறத்தில் அல்லது மஞ்சள் நிறத்தில் சீழ் போன்ற திரவம் வடியும். வெளிவரும் திரவத்தின் அளவு, மாடுகள் சினைப்பருவத்திலிருக்கும் போது வாய்ப்பகுதி திறந்திருப்பதால் அதிகமாகவும் மற்ற சமயங்களில் குறைவாகவும் காணப்படும்.

             மாடுகளில் பால் உற்பத்தி குறைந்து, தீவனம் எடுப்பது குறைவாகும்.

தடுப்பு முறைகள்

                   இந்நோயினால் பாதிக்கப்பட்ட கறவை மாடுகளைப் பாதுகாக்க கால்நடை மருத்துவரை அணுக வேண்டும்.

கர்ப்பப்பையின் உட்சவ்வு அழற்சி | அறிகுறிகள் | தடுப்பு முறைகள்

கருத்துகள் இல்லை