கன்றுகள் திடீரென இறந்துவிட்டால், அதனால் கன்று வளர்ப்போர் மிகவும் பாதிப்படைவார்கள். அந்த கவலையை போக்கி, அவற்றை சரிசெய்ய இந்த காப்பீடு உதவுகிறது. அதற்காக கன்றுகளுக்கு காப்பீடு செய்ய வேண்டும்.
கன்றுகளுக்கு 4 மாத வயதிலிருந்தே காப்பீடு செய்ய தொடங்கலாம்.
கன்று வளர்ப்பு திட்டத்தின் மூலம் வளர்க்கும் கன்றுகளுக்கு 4 மாதம் முதல் 32 வயது வரை, கன்றின் மதிப்பில் 4 சதவீதம் என தொகையை செலுத்த வேண்டும்.
அரசு திட்டத்தில் இல்லாத மற்ற கன்றுகள் வளர்ப்பிற்கு அதன் மதிப்பில் 5 சதவீதம் வரை தொகையை செலுத்தி வர வேண்டும். கன்றுகள் திடீரென இறந்துவிட்டால், அந்த தகவலை 24 மணி நேரத்திற்குள் சம்பந்தப்பட்ட காப்பீடு நிறுவனத்திற்கு தெரியப்படுத்த வேண்டும்.
பிறகு கால்நடை மருத்துவரை அணுகி, இறந்த கன்றை பரிசோதித்து, அதன்மூலம் சான்றிதழ் பெற்றுக்கொள்ள வேண்டும்.
பிறகு காப்பீட்டுத்தொகை பெறுவதற்கான கோரிக்கை மனுவுடன், சான்றிதழ்களையும், அடையாளத்தோட்டையும் குறிப்பிட்ட நிறுவனத்திற்கு அனுப்ப வேண்டும். இதன்மூலம் தேவையான காப்பீட்டுத்தொகையை பெறலாம்.
கருத்துகள் இல்லை