பனி காலத்தின் போது, கால்நடைகளை திறந்த வெளியில் கட்டாமல் கூரைக்குள்ளோ அல்லது நான்கு புறமும் பனிச்சாரல் வீசாவண்ணம் தார்ப்பாய் போட்டு மூடி பாதுகாத்தால் எந்த பாதிப்பும் இருக்காது. பனி, மழை காலம் என்றால் மாடுகளுக்கு நிமோனியா காய்ச்சல் வரும். நுரையீரல் பாதிக்கும். எனவே முன் எச்சரிக்கையுடன் மாடுகளுக்கு தடுப்பூசி போட வேண்டும்.

                கன்றிற்குத் தேவையான படுக்கை வசதி அமைத்து அதை குளிரிலிருந்து பாதுகாக்க வேண்டும். கொட்டகையை சுத்தமாக வைத்துக்கொள்வதன் மூலம் தொற்றுநோய் தாக்குதலிலிருந்து பாதுகாக்கலாம்.

குளிர்கால தீவன மேலாண்மை

                 பனி காலங்களில், மாடுகளை வெட்ட வெளியிலோ, வயல்காட்டிலோ மேய விடக்கூடாது. ஏனென்றால், புற்களின் நுனி பகுதியில் கல்லீரல் புழு, லார்வா புழுக்கள் அதிகளவில் தென்படும். இவற்றை மேயும் கால்டைகளுக்கு நோய்கள் ஏற்படும்.

                குளிர் காலத்தில் பசும்புல் அதிகமாக அளிப்பதை தவிர்க்க வேண்டும். அதிகளவில் உலர் தீவனங்கள் அளிக்க வேண்டும்.

               அசோலா பாசியை தினமும் ஒரு மாட்டிற்கு 2 கிலோ அளவில் அளிக்கலாம். இதன் மூலம் புரதச்சத்து தேவையை ஈடுசெய்யலாம்.

குளிர்காலத்தில் மாடுகள் பராமரிப்பு

                குளிரில் இருந்து கால்நடைகளை பாதுகாத்தால் பல்வேறு நோய்களில் இருந்து காக்க முடியும். குளிர் காலம் தொடங்குமுன் பேன் பரவலைத் தடுக்க, மருந்து நடவடிக்கைகளைச் செய்யவேண்டும்.

                குளிர் காலத்தில் குளம்புசிதைவு நோய் வருவதால் கொட்டகையை சுத்தமாக பராமரிக்க வேண்டும். இதற்கு கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

குளிர் காலத்தில் கொட்டகை பராமரிப்பு

கருத்துகள் இல்லை