ஒன்றிரண்டு மாடுகளைக் கொண்ட ஒரு சிறிய விவசாயிதான் நமது நாட்டில் ஒரு பொதுவான கால்நடை உரிமையாளராக இருக்கின்றனர். பயிர் மற்றும் கால்நடை உற்பத்தியை உள்ளடக்கிய கலப்பு விவசாய முறையின் ஒரு பகுதியாக விவசாயி கால்நடைகளை வளர்க்கிறார். பால் விற்பனை மூலம் கிடைக்கும் வழக்கமான கால்நடை வருமானம் பருவகால விவசாய வருமானத்திற்கு பிற்சேர்ப்பாக பயன்படுகிறது. சிறு விவசாயிகள் தங்கள் வருமானத்தில் பாதிக்கும் மேலானதை கால்நடைகளிலிருந்தே பெறுகின்றனர், கால்நடைகளின் மதிப்பே விவசாயிகளின் செல்வத்தில் கணிசமான சதவீதத்தை பிரதிபலிக்கிறது. எனவே கால்நடைகள் இறப்பு என்பது கணிசமான ஆபத்தை ஏற்படுத்துவதுடன் விவசாயியின் நிகர மதிப்பு மற்றும் வருவாயையும் பாதிக்கிறது. இந்த காப்பீட்டு திட்டமானது இரட்டை நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. ஒன்று, விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்களுக்கு, திடீரென்று ஏற்படும் கால்நடை இழப்பிலிருந்து பாதுகாப்பு அளிப்பதாகும். மற்றொன்று, கால்நடை காப்பீட்டின் முக்கியவத்துவத்தை மக்களுக்கு உணர வைத்து, திட்டத்தை பிரபலப்படுத்தி, கால்நடை மற்றும் அதை சார்ந்த பொருளின் தரத்தை உயர்த்துவதாகும்.
இந்த திட்டத்தின்கீழ், உள்நாட்டு மற்றும் கலப்பின வகை கறவை பசுக்கள் மற்றும் எருமைகள், அதிகபட்சமான சந்தை மதிப்பை இழப்பீடாகப் பெறும் வகையில் காப்பீடு செய்யப்படுகின்றன. காப்பீட்டிற்கான பிரிமிய கட்டணத்தில் 50% வரை மானியமாக வழங்கப்படுகிறது. இந்த மானியத்தொகை முழுவதையும் மத்திய அரசே ஏற்கிறது. இந்த மானியச் சலுகை, ஒரு பயனாளிக்கு இரண்டு கால்நடைகள் வீதம், அதிகபட்சமாக 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது.
இந்த திட்டமானது அனைத்து மாநிலங்களிலும் அந்தந்த மாநில கால்நடை மேம்பாட்டு கழகத்தின் மூலம் அமல்படுத்தப்படுகிறது.
தகுதி
காப்பீட்டு திட்டமானது உள்நாட்டு மற்றும் கலப்பின பசுக்கள் மற்றும் எருமைகள் ஆகியவற்றிற்கு பொருந்தும். ஏற்கனவே ஒரு கன்று ஈன்ற, தற்போது பால் கறந்துகொண்டிருக்கும், கறவை வற்றிய மற்றும் கர்ப்ப காலத்திலுள்ள அனைத்து கால்நடைகளுக்கும் பொருந்தும். இப்படிப்பட்ட கால்நடைகளுக்கு, அதிகபட்ச சந்தை விலைக்கு காப்பீடு அளிக்கப்படுகிறது.
காப்பீட்டு மானியம் எப்பொழுது கிடைக்கும்?
விபத்து (வெள்ளம், சூறாவளி, பஞ்சம் உட்பட) அல்லது ஏதேனும் எதிர்பாராத சூழ்நிலைகளில் இடர்பாடுகள் ஏற்படும்பட்சத்தில், குறைவான செலவில் அதிக காப்பீட்டு பலன் பெற முடியும். விவசாயிகள் மூன்று ஆண்டுகளுக்கு குறைவான காலத்திற்கு காப்பீடு செய்துகொள்ள விரும்பினால், அதுவும் சாத்தியமாகும். அவ்வாறு செய்யும் போது, அதே கால்நடைக்கு மீண்டும் காப்பீடு செய்யும்போது திட்ட நடைமுறையில் உள்ளபடி, உரிய காப்பீட்டு மானியம் கிடைக்கும். சந்தையின் அதிக பட்ச விலையை பயனாளி, அங்கீகரிக்கப்பட்ட கால்நடை மருத்துவர் மற்றும் காப்பீட்டு முகவர் ஆகிய மூவரும் சேர்ந்து நிர்ணயம் செய்வர்.
காப்பீட்டு காலத்தில் பயனாளர் மாறினால் என்ன செய்யலாம்?
காப்பீட்டு காலத்தில் கால்நடைகளை விற்றாலோ அல்லது வேறு ஒருவரிடம் கொடுத்தாலோ பயனாளியின் அங்கீகாரம் புதிய சொந்தகாரருக்கு மாற்றப்பட வேண்டும். எனவே, காப்பீட்டு கழகத்தில் காப்பீட்டுக்கு நுழையும்போதே இதற்கான விதிமுறைகளை தீர்வு செய்து கொள்வது அவசியம்.
கன்றுகளுக்கும் காப்பீடு உள்ளதா?
கன்றுகள் திடீரென இறந்துவிட்டால், அதனால் கன்று வளர்ப்போர் மிகவும் பாதிப்படைவார்கள். அந்த கவலையைப் போக்கி, அவற்றை சரிசெய்ய இந்த காப்பீடு உதவுகிறது.
இதற்கு கன்றுகளுக்கு காப்பீடு செய்ய வேண்டும். கன்றுகளுக்கு 4 மாத வயதிலிருந்தே காப்பீடு செய்ய தொடங்கலாம்.
கன்று வளர்ப்பு திட்டத்தின் மூலம் வளர்க்கும் கன்றுகளுக்கு 4 மாதம் முதல் 32 வயது வரை, கன்றுக்கு அதன் மதிப்பில் 4 சதவீதம் என தொகையை செலுத்த வேண்டும்.
அரசு திட்டத்தில் இல்லாத மற்ற கன்றுகள் வளர்ப்பிற்கு அதன் மதிப்பில் 5 சதவீதம் வரை தொகையை செலுத்தி வர வேண்டும்.
கன்றுகள் திடீரென இறந்துவிட்டால், அந்த தகவலை 24 மணி நேரத்திற்குள் சம்பந்தப்பட்ட காப்பீடு நிறுவனத்திற்கு தெரியப்படுத்த வேண்டும்.
பிறகு கால்நடை மருத்துவரை அணுகி, இறந்த கன்றை பரிசோதித்து, அதன்மூலம் சான்றிதழ் பெற்றுக்கொள்ள வேண்டும்.
பிறகு காப்பீட்டுத்தொகை பெறுவதற்கான கோரிக்கை மனுவுடன், சான்றிதழ்களையும், அடையாளத்தோட்டையும் குறிப்பிட்ட நிறுவனத்திற்கு அனுப்ப வேண்டும்.
இதன்மூலம் தேவையான காப்பீட்டுத்தொகையை பெறலாம்.
காப்பீட்டு தொகை கிடைக்க எத்தனை நாட்கள் ஆகும்?
காப்பீடு செய்யப்பட்ட தொகை, தேவையான ஆவணங்கள் அளித்த 15 நாட்களுக்குள் கிடைக்கும். காப்பீட்டு நிறுவனத்துடனான முதல் தகவல் அறிக்கை, காப்பீட்டு பாலிசி ஆவணம், இழப்பீடு கோரும் படிவம் மற்றும் இறந்த கால்நடையின் பிரேதப் பரிசோதன அறிக்கை ஆகிய நான்கு ஆவணங்களின் அடிப்படையிலேயே, காப்பீட்டு நிறுவனம் இழப்பீட்டுத் தொகையை வழங்கும்.
கால்நடைகளை காப்பீடு செய்யும் போதே காப்பீட்டு கழகம் காப்பீட்டை கோருவதற்கான சரியான வழிமுறைகளையும் என்னென்ன சான்றுகள் வேண்டும் என்றும், இவைகளை பயனாளிகளுக்கு பாலிசி எடுக்கும் போதே வழங்கவும் செய்ய வேண்டும்.
ஒரு கால்நடை உரிமையாளர் சரியான காரணங்களுக்காக மூன்று ஆண்டுகளுக்கும் குறைவான காலத்திற்கு காப்பீடு எடுக்க விரும்பினால் அவருக்கு காப்பீடு கிடைக்கும் ஆனால் அவருக்கு மானிய நீட்டிப்பு கிடைக்காது.
எப்பொழுது காப்பீடு கிடைக்காது?
காப்பீடு தொகை செலுத்தி 10 நாட்களுக்குள் கால்நடைகள் இறந்துவிட்டால் காப்பீடு தொகை கிடைப்பதில்லை. காப்பீடு செய்யும் போது அந்நிறுவனத்தால் காது மடலில் பொருத்தப்பட்ட அடையாளத் தகடு காணாமல் போனால் காப்பீடு தொகை கிடைப்பதில்லை.
கருத்துகள் இல்லை